07 February, 2010 by admin
போர் நடந்தபோதும் சரி அதன் பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகளிலும் சரி இலங்கையில் சீனாவின் பங்களிப்பு பெரிதும் உள்ளது தெரிந்ததே. இனியும் தாம் தொடர்ந்து கூட்டு முயற்சியில் ஈடுபட்டு இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை வளர்க்க விருப்புவதாக இலங்கையில் 62 ஆவது சுதந்திரதின வாழ்த்துச் செய்தியில் சீன ஜனாதிபது ஹு ஜிண்டாவோ கூறியுள்ளார். இலங்கையும், சீனாவும் நல்ல அண்மை நாடுகள், நண்பர்கள் மற்றும் கூட்டாளர்கள் என்றும் வரப்போகும் ஆண்டுகளின் இருதரப்பு உறவுகள் மேலும் புதிய வளர்ச்சி காணும் எனவும் கூறியுள்ளார்.
இலங்கையின் வடக்கு மற்றும் தெற்கில் நடந்து கொண்டிருக்கின்ற மற்றும் முடிந்துள்ள அபிவிருத்தித் திட்டங்களுக்கென இதுவரை சீனா 6.1 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுதவிர மேலும் ஒரு 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை அளிக்க சீனா இணங்கியுள்ளது. இது இலங்கையில் உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்ய உதவியாக இருக்கும் என்றும், தேசியக் கட்டமைப்புல் புதிய வளர்ச்சியைக் கொண்டுவரும் என்றும் தாம் நம்புவதாக சீன ஜனாதிபதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.