ATHIRVU.COM
விரிவான செய்தி
  
இலங்கை தேசியக் கொடியை எரிக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டில் பிரிட்டனில் ஒருவர் கைது

07 February, 2010 by admin

நேற்று முன்தினம் இலங்கையில் 62 ஆவது சுதந்திர தினமாகும். இதன் கொண்டாட்டங்கள் பிரிட்டனிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்திலும் நடந்தன. நிகழ்வு நடந்து கொண்டிருந்தபோது, இலங்கையில் தேசியக் கொடிக்கு எரியூட்ட ஒரு குழுவினர் முயற்சி செய்ததாகவும் அவர்களில் ஒருவரைப் போலீஸ் கைது செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இலங்கை புலம்பெயர் மக்களின் குழுவொன்று தூதரகத்துக்கு முன்னே ஒன்றுகூடி இவ்வாறு தேசியக் கொடியை எரிக்க முயன்றதாகவும், ஆனால் பிரிட்டன் போலீசார் வெற்றிகரமாக இதைத் தடுத்து நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் வெளிநாட்டு அமைச்சுத் தகவல்கள் கூறுகின்றன.

லண்டனிலுள்ள புலிகளின் ஆதரவாளர்களும், ஜே.வி.பி இனரும் சேர்ந்தே இந்த முயற்சியில் இறங்கியிருக்கலாம் எனவும், கைது செய்யப்பட்டுள்ள நபர் புலிகளின் ஆதரவாளர் என நம்பப்படுவதாகவும் மேலும் அரசாங்கத்தால் கூறப்பட்டுள்ளது. நிலமையைக் கூர்ந்து கவனித்து குற்றவாளிகளை இனங்கண்டு, பதிவு செய்யும்படி இலங்கை வெளிநாட்டு அமைச்சர் லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு அறிவுறுத்தியுள்ளாராம்.


Send To Friend |   செய்தியை வாசித்தோர்: 1577







விளம்பரங்கள்






© 2009 Athirvu. All Rights Reserved. Home | About Us | Contact Us | To Advertise | Privacy Policy | Feedback