ATHIRVU.COM
விரிவான செய்தி
  
நாளை முதல் ராணுவப் பேச்சாளராக பிரிகேடியர் பிரசாத்

07 February, 2010 by admin

ராணுவப் பேச்சாளராக இருந்த பிரிகேடியர் உதய நாணயக்கார இனி ராணுவத்தின் தலைமை களப் பொறியியலாளராக பொறுப்பேற்கவுள்ளார். நாளை திங்கட்கிழமை முதல் அவர் புதிய கடமையை பொறுப்பேற்கவுள்ள நிலையில் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க ராணுவப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் நாளை திங்கட்கிழமை முதல் தமது ராணுவப் பேச்சாளருக்கான கடமையை பொறுப்பேற்கிறார். முன்னர் ராணுவப் பேச்சாளராக இருந்த பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, அதன் பின்னர் லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் ராணுவ ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார். லண்டனில் அவருக்கு வழங்கப்பட்ட நியமனத்தில் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே பிரிகேடியர் உதய நாணயக்கார ராணுவப் பேச்சாளராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் இலங்கைக்குத் திரும்பியுள்ள பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க ராணுவத்தின் தலைமை தொலைத்தொடர்பு அதிகாரியாகவும் சமிக்ஞை அதிகாரியாகவும் நியமனம் பெற்றுள்ளார். இந்த பதவியோடு மேலதிகமாக ராணுவப் பேச்சாளர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.


Send To Friend |   செய்தியை வாசித்தோர்: 1426







விளம்பரங்கள்






© 2009 Athirvu. All Rights Reserved. Home | About Us | Contact Us | To Advertise | Privacy Policy | Feedback