ATHIRVU.COM
விரிவான செய்தி
  
தமிழ் அகதிகள் 76 பேர் விடுதலையை கனடா நீதிமன்றம் ரத்து செய்கிறது

07 February, 2010 by admin

கடந்த வருடம் ஒக்ரோபர் மாதம் 17 ஆம் திகதி இலங்கை அகதிகள் 76 பேருடன் வன்கூவர் கடற்கரையை அடைந்த கப்பலான ஓஷியானிக் லேடியைக் கைப்பற்றிய கனடா அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். மேற்படி 76 பேருக்கும் கனடாவில் தடைசெய்யப்பட்டுள்ள இயக்கமான விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளது எனக் கூறிய கனடா அரசு அவர்களை விலங்கிட்டு தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்தது. ஆனால் விசாரணைகளில் அகதிகளுக்கும் புலிகளுக்கும் தொடர்பு உள்ளது என்பதை நிரூபிக்க முடியாமல் போன நிலையில் அகதிகள் கட்டம் கட்டமாக கனடா குடிவரவு மற்றும் அகதிகள் சபை விடுவித்துள்ளது. அரசாங்கமானது தனது விசாரணைகளை நடத்திக் கொண்டிருக்கும் சமயத்தில் அகதிகளை விடுவித்ததற்காக கனடா நீதிமன்றம் குடிவரவு மற்றும் அகதிகள் சபையைக் குற்றம் கூறியுள்ளது. இந்த விடுதலையை மிகவும் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களால் கண்டித்து தடைசெய்துள்ளது நீதிமன்றம்.

நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து அரசாங்கத்திற்குள்ள பங்களிப்பை குடிவரவு மற்றும் அகதிகள் சபை தனது கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டது எனவும் நீதிமன்றம் குறைகூறியுள்ளது. சட்டவிரோதமற்ற முறையில் இதுபோன்ற நபர்கள் தடுத்து வைக்கப்படுவதன் முக்கியத்தினை மறக்கக்கூடாது என்றும் கனடாவின் எல்லைகளைக் காப்பதில் கனடா மக்களினதும், கனடாவினதும் ஆர்வத்தையும் கவனத்தில் எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி ரொபேர்ட் எல். பார்னெஸ் குறிப்பிட்டுள்ளார். குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தினைப் பயன்படுத்தி வெளிநாட்டு நபரை காலவரையறையின்றித் தடுத்து வைக்க முடியாதெனக் குறிப்பிட்டுள்ள நீதிபதி, இதனாலேயே விசாரணைகளுக்கென குறிப்பிட்ட ஒரு காலம் ஒதுக்கப்படுகிறது என்றார்.


Send To Friend |   செய்தியை வாசித்தோர்: 6051







விளம்பரங்கள்






© 2009 Athirvu. All Rights Reserved. Home | About Us | Contact Us | To Advertise | Privacy Policy | Feedback