ATHIRVU.COM
விரிவான செய்தி
  
ஜெனரல் சரத் பொன்சேகா கைது (4ம் இணைப்பு )

08 February, 2010 by admin



எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த சரத்பொன்சேகாவின் பணிமனைக்குச் சென்ற இராணுவப் பொலிசார் அவரைக் கைதுசெய்ததாக அறியப்படுகின்றபோது. சம்பவ இடத்தில் ரவுக் கக்கீம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. என்ன காரணங்களுக்காக தம்மை கைதுசெய்கிறீர்கள் என சரத்பொன்சேகா கேட்டபோது, காரணங்கள் எதுவும்
கூறாமல் அவர் கைகளைப் பிடித்து, மரியாதைக் குறைவாகவும், ஒரு முன் நாள் இராணுவ தளபதி என்றுகூடப்பாராமல் அவரை அதிகாரிகள் இழுத்துச் சென்றதாகவும் சம்பவத்தை நேரில்பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அவர் வாசல் தலத்திற்கு வெளியே நின்றிருந்த ஏ.எப்.பி செய்திச்சேவையின் நிருபரின் கமராவில் உள்ள சிப்பை இலங்கை இராணுவத்தினர் உடைத்தெறிந்ததாகவும் ஏ.எப்.பி செய்தியாளர் விசனம் தெரிவித்துள்ளார்.



Send To Friend |   செய்தியை வாசித்தோர்: 54111







விளம்பரங்கள்






© 2009 Athirvu. All Rights Reserved. Home | About Us | Contact Us | To Advertise | Privacy Policy | Feedback