விரிவான செய்திகள்

 

வட்டர் வடிவேல் மரண அறிவித்தல்

03 March, 2013 by adminஅமரர் வட்டர் வடிவேல்
பிறப்பு : 16 யூன் 1948 — இறப்பு : 1 மார்ச் 2013


யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், மன்னார் கள்ளியடி, விடத்தல்தீவு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது யாழ்.கோப்பாயை வதிவிடமாகவும் கொண்டிருந்த வட்டர் வடிவேல் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.

நாம் ஒன்று நினைக்க
தெய்வம் ஒன்று நினைக்கும்
என்ற சொல் வார்த்தை
உண்மை தானப்பா...!

எங்களை தத்தளிக்க
விட்டு விட்டு நீங்கள்
தனிவழியே போனதேன் அப்பா???

எல்லா கடமைகளும்
எங்களிற்கு செய்து விட்டீர்கள்
என்று நீங்கள் நினைத்து
நிம்மதியாய் போக நினைத்தீர்களோ அப்பா...!

மதியம் என்னைப் பார்த்து கதைத்து விட்டு
மாலையில் நீங்கள் எங்கு போனீரப்பா???

நீங்கள் என்னை எத்தனையோ கேட்டீர்களே!
அதை நான் செய்ய நீங்கள்
இன்று இல்லையே அப்பா...!
ஏன் இந்த அவசரம் அப்பா???

அம்மாவிற்கு முன் நான் போக வேணும் என்று சொல்லி
செயலிலும் செய்தீர்களோ அப்பா...

செல்வம் என்று சொன்ன மகள்
உங்களிடம் வந்த பின்பு
செல்வமான நீங்கள் எங்கு
தவிக்கவிட்டு சென்றீரையா???

செல்ல மகள் துடி துடிக்க
உங்கள் மகள் கதறியழ
ஆசை மகன் ஏங்கி நிற்க
மற்ற மகள் சேர்ந்திருக்க
கடைசி மகள் தேடி வர
நீங்கள் எங்கு போனீரப்பா???

மாலை வந்து கதைத்திடுவோம்
என்று வந்த இந்த மகள்
அப்பாவின் மிகுதிக் கதைக்க
காத்திருக்க....
அப்பா நீங்கள் எப்ப வந்து
மிச்சம் சொல்வீர்???

ஆற முடியலையப்பா
அம்மாவிற்கு நீங்கள் தான் ஆறுதலாய்
இருப்பீர் என்றால்...
உங்களிற்கு என்னதான் அவசரமோ!

தம்பிக்கு நாங்கள் என்ன பதில் சொல்வதப்பா?
எல்லோரையும் பார்த்து விட்டு
அவனை மட்டும் பார்க்க மறந்ததேனப்பா!

அதீசும் தேடுறானப்பா...
அர்சன் காட்ஸ் விளையாட
தாத்தா வருவாரா என்கிறானப்பா
என்ன பதில் சொல்ல நான்???

அப்பா என்ற சொல் அரை வாசியில்
போகுமென்று யாருமே நாங்கள் நினைத்ததில்லை
உங்களை தேடுகிறோம் அப்பா...

எங்கள் செல்ல அப்பா
எங்கள் ஆசை அப்பா
சுவிஸிற்கு கூப்பிடுறன்
ஓடோடி வாறீங்களப்பா?

உங்கள் பிரிவால்
வாடி நிற்கும் பிள்ளைகட்கு
ஆறுதலை தாங்கள் அப்பா...

பகிடி விடும் மாமாவை
உங்கள் பாச மருமக்கள்
தேடுகிறார்களப்பா...

மூத்த பேரன் தாத்தாவை
முப்புறமும் தேடுகிறான்
மூத்த பேத்தி தாத்தாவை
முழு இடமும் தேடுகிறாள்
மற்ற பேரன் பேத்தியுமே
ஆட்டோவிற்குள் தேடுகிறார்...

அப்பா நீங்கள் எங்குதான்
ஒளிந்தீரோ???
ஓடோடி வாருமப்பா...!!!

தகவல்
பிள்ளைகள்


|    செய்தியை வாசித்தோர்: 8750

DMCA.com