விரிவான செய்திகள்

 

திரு. சின்னப்பு பேரம்பலம் மரண அறிவித்தல் !

03 March, 2013 by adminமலர்வு: 16.03.1939 உதிர்வு:02.03.2013

தென்மராட்சி மீசாலையை பிறப்பிடமாகவும் கரைச்சி கலவெட்டித்திடலை வசிப்பிடமாகவும் புளியம்பொக்கணை சந்தி (நாகதம்பிரான் அரிசி ஆலை) யை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பு பேரம்பலம் அவர்கள் 02.03.2013 (சனிக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார், காலம் சென்ற சின்னப்பு மாணிக்கம் தம்பதிக‌ளின் அன்பு மகனும், காலம் சென்ற கணபதிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், அன்னலக்ஷ்மி, காலஞ்சென்ற ஜெயலக்ஷ்மி ஆகியோரின் அன்புக்கணவரும், பொன்னம்மா, காலஞ்சென்ற பொன்னுத்துரை,ஐயாத்துரை,தங்கராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரனும், தயானி,சாந்தினி,சிறிதரன்,காலஞ்சென்ற சிறீறஞ்சினி,சிறீகாந்தா,நந்தினி, காலஞ்சென்ற அருந்தவச்செல்வம்,சுதாகரன்,சிறீறஞ்சன்,காலஞ்சென்ற கஜமுகா, குமுதினி,கோமதி,பவானி ஆகியோரின் பாசமிகு தந்தையும், கணபதிப்பிள்ளை, சிதம்பரநாதன், மோகனா, வத்சலா, சங்கர், சியாமளா, மனோஜினி, அனுஷா, சாந்தன், தினேஷ்,முரளி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (03.03.2013) காலை 10 மணியிலிருந்து பிற்பகல் 2 மணிவரை புளியம்பொக்கணை சந்தியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, அதன்பின் பூதவுடல் கலவெட்டித்திடல் நெடுமோட்டை இந்துமாயானத்தில் நடைபெறும்.

இத்தகவலை உற்றார்,உறவினர்,ந‌ண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்,
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு,

சிறி- 0094778380149


|    செய்தியை வாசித்தோர்: 7922

DMCA.com