விரிவான செய்திகள்

  

சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிரான இலங்கையின் ஆவணப்படம்: பிசு பிசுத்துப்போனது !

13 October, 2011 by admin

சனல் 4 தொலைக்காட்சி இலங்கையின் கொலைக் களங்கள் என்ற 30 நிமிட ஆவணப்படத்தை வெளியிட்டது. அதனை பல நாடுகள் பார்வையிட்டது மட்டுமல்லாது பல நாடுகளின் பராளுமன்றிலும் அவை காண்பிக்கப்பட்டது. இதனால் இலங்கைக்கு பாரிய பின்னடைவுகள் ஏற்பட்டது. இதனை நிவர்த்திசெய்ய தாமும் ஒரு ஆவணப்படத்தை இலங்கை எடுத்தது. அதனை முதன் முறையாக பிரித்தானியாவில் காட்ட அது முற்பட்டது. நேற்றைய தினம் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் அதனை பல எம்.பிக்களுக்கு முன் காட்ட இலங்கை அரசு முற்பட்டது. பல தமிழர்கள் அங்கேசென்று அதனைப் பார்வையிட்டு கேள்விகள் கேட்க முற்பட்டனர். இதனை முதலிலேயே அறிந்துகொண்ட இலங்கை அரசு பிரித்தானிய எம்பீக்கள் மட்டுமே இந் நிகழ்வுக்கு அணுமதிக்கப்படுவர் என அறிவித்தது.

இதனால் தமிழர் இக் கூட்டத்தில் கலந்துகொண்டு கேள்வி கேட்க்கும் வாய்ப்பு இல்லாது போனது. இருப்பினும் சாதூரியமாக 3 தமிழர்கள் அந்த நிகழ்வு நடக்கும் மண்டபத்துக்குள் நுழைந்தனர். அதில் அதிர்வின் நிருபரும் அடங்குகிறார். முதலில் காணொளி காண்பிக்கப்பட்டது. பின்னர் அது குறித்த கேள்விகளை கேட்கலாம் என நேரம் ஒதுக்கபப்ட்டது. சுமார் பிரித்தானிய எம்.பீகளில் 4 பேரே இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அதிலும் அந்த 4 எம்.பீக்களில் மூவர் வெளியே சென்று விட்டனர். 1 எம்.பியோடு இந் நிகழ்வு நடைபெற்றது. சனல் 4 தொலைக்காட்சி பிரிவில் இருந்து யார் வந்தாலும் அவர்களை அனுமதிக்கவேண்டாம் என ஏற்கனவே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சாதூரியமாக ஊடுருவி இலங்கையின் கொலைக்களங்கள் என்னும் சனல் 4 வீடியோவைத் தயாரித்த தயாரிப்பாளரான பெண் மணி ஒருவர் அங்கே வந்து இலங்கை அரசைக் கேள்விமேல் கேள்வி கேட்டு சிக்கலில் தள்ளினார்.

அவரைத் தொடர்ந்து அதிர்வு நிருபருக்கும் கேள்வி கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. சனல் 4 ஒளிபரப்பிய காணொளிக்கு எதிராக நீங்கள் பிறிதொரு காணொளியை படம் பிடித்து காட்டுகிறீர்களே, அதனை மேற்குலக நாடுகளில் காண்பித்து ஆதரவு தேட முனைகிறீர்களே, ஏன் மேற்குலகு சொல்வதைப் போல சர்வதேச விசாரணைக் குழு ஒன்றை இலங்கைக்குள் அனுமதிக்கக்கூடாது ? என்று அதிர்வு நிருபர் கேள்வி எழுப்பினார். அதற்கு சரியான பதிலைக் கூறாது நழுவிய இலங்கைப் பேச்சாளர், மெளனம் சாதிக்க முன் வரிசையில் அமர்ந்திருந்த கம்சா அவர்கள் அதிர்வின் நிருபரை புகைப்படம் எடுத்து மற்றும் வீடியோவில் பதிவுசெய்து தாம் எல்லாவற்றையும் பதிவுசெய்வது போல மிரட்டினார். இதனையும் பொருட்படுத்தாது அதிர்வின் நிருபர் தொடர்ந்தும் தன் கேள்வியை முன்வைத்தார்.

அதற்குப் பின்னர் மற்றுமொரு தமிழர் எழுந்து தமிழ் பயங்கரவாதிகள் என்று ராஜீவ விஜயசிங்க குறிப்பிட்டதை வன்மையாகக் கண்டித்தார். தமிழ் பயங்கரவாதிகள் என நீங்கள் குறிப்பிடுவது அனைத்து தமிழர்களையும் தான் என்ற கருத்துக்கு அமைக்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார். இதனை அடுத்து தாம் இவ்வாறு பேசியிருந்தால் மன்னிப்பு கோருவதாக ராஜீவ விஜயசிங்க தெரிவித்தார். சுமார் 150 சிங்களவர்கள் அமர்ந்திருந்த அவ்விடத்தில் 3 தமிழர்கள் மட்டுமே இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும். ஒவ்வொரு முறை தமிழர்கள் பேச எழும் போதும் சிஙகவர்கள் கூச்சலிட்டும் நக்கலடித்தும் தமிழர்களை கொச்சைப்படுத்துவதை தமது வேலையாக நினைத்துச் செய்தார்கள். அங்கே வந்திருந்த சனல் 4 தொலைக்காட்சியின் கொலைக் களங்கள் தயாரிப்பாளரான் பெண் மணி பேச முற்படும்போதும் சிங்களவர்கள் கூச்சலிட்டனர். எள்ளி நகையாடினர்.

இறுதியாக இந் நிகழ்வு முடிவுக்கு வரமுன்னர் அனைத்து தமிழர்களும் எழுந்து வெளியே சென்றவேளை அவர்களை சூழ்ந்துகொண்ட சிங்களவர்கள் தமது எதிர்ப்பைத் தெரிவிதுக் கொண்டனர். அதிர்வு நிருபர் உட்பட மற்றைய 2வரும் ஒருவாறாக வெளியே வந்து தமக்கு நடந்த அனுபவங்களை மற்றைய செய்தியாளர்களுக்கு பகிர்ந்துகொண்டனர். இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் இலங்கையின் காணொளி ஆரம்பமாகிய சில நிமிடங்களில் பிரித்தானிய எம்பீக்கள் தூங்க ஆரம்பித்து விட்டனர். 4 எம்பீகள் மட்டும் சமூகமளித்த நிலையில் அவர்களில் பலர் தூங்க ஆரம்பித்து விட்டனர். இலங்கை அரசின் ஊதுகுழல் பெண் மணி திருமதி ராஜேஸ்வரி அவர்கள் மட்டும் இலங்கைத் தமிழர்கள் நிம்மதியாக வாழவேண்டும் என்றும் சனல் 4 தொலைக்காட்சி இலங்கையில் மீண்டும் ஒரு போர் ஆரம்பிக்க உதவுவதாகவும் குற்றஞ்சாட்டினார். அதுமட்டுமல்லாது விடுதலைப் புலிகள் மீதும் அதன் தலைமை மீதும் கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

மொத்தமாகச் சொல்லப்போனால் இலங்கையின் காணொளி நாடகம் பிரித்தானியாவில் பிசு பிசுத்துப் போனது என்பதே உண்மையாகும். 150 சிங்களவர்கள் வந்திருந்தாலும் 3 தமிழர்கள் எழுப்பிய கேள்விகள் சிங்கள அரசின் பேச்சாளர்களை கதி கலங்க வைத்தது என்பதே உண்மையாகும்.









your comments



comments by:கணேசமூர்த்தி

அதிர்விற்கு வாழ்த்துக்கள் ! சும்மா தாயகம் தேசியம் பற்றி பேசிக்கொண்டிருப்பவர்கள் உள்ளே செல்ல முடியாவிட்டாலும்
வெளியிலாவது நின்று ஆதரவினை தெரிவித்திருக்கலாம். சிறிலங்காவின் பொக்கற்றுக்குள் அதிர்வு விழுந்து விட்டதென
பொய் சொல்பவர்களும், 10 p இக்கு இணையத்தளம் நடத்துகின்றவர்கள் என்று வானொலியில் அலட்டுபவர்களும்
எங்கே போனார்கள் ? இப்படியொரு சம்பவம் நடந்தது IBC இக்கு தெரியாதோ...வன்னிகளம் என்று வாயடிப்பவர்களுக்கு
இப்படியான பரப்புரைகள் எங்கே தெரியப்போகிறது. ஆளாளுக்கு தேசிய ஊடகம் நடத்துகிறார்கள். முக்கியமான இடத்தில்
எதிரியோடு மோதும் போது இந்த குழப்பல்வாதிகள் வரமாட்டார்கள். எல்லாம் எஜமான விசுவாசம்.

-கணேசமூர்த்தி
---------------------------------------------
comments by: Sinthu

உள்ளே நுழைந்த அதிர்வுக்கும் மற்றைய இரு (BTF) பிரதிநிதிகளுக்கும் நன்றி. திருமதி ராஜேஸ்வரி போன்ற புல்லுருவிகள் எம்மிடையே இருப்பது வருந்தத்தக்க விடயம்தான். இன்னுமொன்று....... சிங்களவர்கலேல்லோரும் எவ்வளவு ஒற்றுமையாக தமிழர்களுக்கு எதிராக பொய்யை ஒப்புவிக்கிறார்கள். அதில் தங்களுக்குள் குழம்பவுமில்லை. இதேமாதிரி தமிழர்கள் உண்மையை சொல்லவந்தால் நம் தமிழரே நம்மை ஆயிரத்தெட்டு கேள்வி கேற்பார்கள். எம்தமிழரே இனியாவது ஒற்றுமையாக வாருங்கள் செயற்படுங்கள்.
---------------------------------------------
comments by: Sutha
This is the way we have to counter SL government. Rather than doing a protest out side the building. Now the neutral MPs knows what happen in Mullivikal. My wishes for 3 BRAVE Tamils !
---------------------------------------------
comments by: இரவி சங்கர்.
உங்களது நிருபர் துணிந்து சென்று அங்கு நடந்தவற்றை பதிவு செய்து செய்தி வெளியிட்டமைக்கு மிக்க நன்றி. எங்களது உளவுத்துறை சங்கீதங்கள் இப்படியான விடயங்களுக்கு போக மாட்டார்களா? அல்லது இந்த அல்லக்கைகளின் வேலை தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதுதானா?
---------------------------------------------
comments by: சத்தியசீலன்
சிங்கள அரசின் கோட்டைக்குள் நுளைந்த 3 தமிழர்களுக்கும் முதலில் எனது வாழ்த்துக்கள் ! இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் அதிர்வை சிலர் குறைகூறுவது தான். தாங்களும் செய்யமாட்டார்கள் செய்தாலும் குறைகூறுவார்கள். இதுதான் உலகம். ஆனால் அதிர்வு உங்க பணி தொடரட்டும்.
---------------------------------------------
comments by: Thiru from UK
Well done athirvu. We had herd about this meeting. But they said its only for MP s. and not other person allowed. You have used your media pass in a proper way. And done a good job for Tamils.
---------------------------------------------
comments by: மகேந்திரன் லண்டன்
துணிந்து செயல்பட்ட அதிர்வு நிருபருக்கு எனது உள்ளங்கனிந்த நன்றிகள். நெஞ்சில் உரம் இருந்தால் வஞ்சத்தையும் வென்றிடலாம்.
---------------------------------------------
comments by: Nilavan
wel done athirvu. best wishes but watch your back. u will be the first target to SL Government.
---------------------------------------------
comments by: PJ.Raj
thanks athirvu for tamil support.
---------------------------------------------
comments by: Shankar
இந்த ஒளிப்பதிவு செய்திக்கு ஏற்ற போல அமையவில்லையே......:)
---------------------------------------------
comments by: Ruban

Great Job! Well done please continue.
You are doing a great job explaining the issues within the tamil community. Specially the "மாவீரர் தினத்தை நடந்த யாருக்கு அருகதை" it should be who ever appointed before May 2009. We should not allow/believe anybody stepping in name of helping tamils after May 2009 should be rejected...
---------------------------------------------
comments by:Sinnia

This criminal is responsible for the killing of all innocent Tamils in Sri Lanka.He is trying to cover up all the crimes he committed by telling all the lies to get the support of his people and to fool some countries in the world. One thing this fool must remember is that he cannot FOOL ALL THE PEOPLE ALL THE TIME.The sins he committed to the innocent women and childern will hound him for ever.
---------------------------------------------
comments by: Sasikumar
well done keep this
---------------------------------------------
comments by: Karan

காலத்தின் தேவையறிந்து செயலாற்றும் ஊடகமான அதிர்வுக்குப் பாராட்டுகள். தொடரட்டும் உன்பணி.
---------------------------------------------
comments by: றஜிசீலன்

வாசகர் கருத்து பகுதிக்கு செல்ல முடியவில்லையே? எனது கருத்தைபிரசுரிப்பீர்களா?


வணக்கம்,


காணொளி தெளிவாக விளங்கவில்லை, அத்துடன் எம்.பிக்களுக்கு மட்டுமே அனுமதியென்றால் எவ்வாறு 150 சிங்களவர்கள் அங்கே கூட முடிந்தது? அதற்கான ஏற்பாட்டினை யார் செய்தார்கள்? இதைப்பற்றி ஒரு கேள்வியை தொடுத்திருக்கலாமே?


திருமதி. ராஜேஸ்வரி அவர்களே, இலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் Channel 4 இப்படியான காணொளிகளை ஒளிபரப்பக்கூடாதென கூறுகிறீர்களே, அப்போ Channel 4 இப்படியான காணொளிகள் ஒளிபரப்ப முன்னர் தமிழர்கள் நிம்மதியாக வாழ்ந்தார்களா? தமிழர்களுக்கு நிம்மதி வேண்டுமென்று நீங்கள் இலங்கை அரசு , இந்தியா ,ஐ.நா போன்ற இடங்களில் தானே போய் கேட்க வேண்டும் அதை விடுத்து இப்படி சிறுபிள்ளைத்தனமாக நடப்பது முறையல்லவே? நீங்கள் 'திலகமிட்ட சிங்களத்தி', இனி எதை எழுத உங்களைப்பற்றி....


அதிர்வின் வாய்ப்பிற்கு நன்றி.


றஜிசீலன்
---------------------------------------------
comments by: Thiru

நல்லது, வாசகர்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வையுங்கன் , பாராட்டுங்கள், குறைகளை கூறுங்கள் அதைவிட்டு மற்றவர்களுடன் ஒப்பிட்டு பகைமையை வளர்காதீர்கள். அதிர்வுக்கு நன்றி, இன்னும் சிறப்பாக செய்ய வாழ்த்துக்கள்
---------------------------------------------


Send To Friend |    செய்தியை வாசித்தோர்: 68976