யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவில் 17 வயது பாடசாலை மாணவியின் நிர்வாணப் புகைப்படங்களை காண்பித்து பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற இரண்டு மன்மதராசாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புங்குடுதீவு 4, 6ஆம் வட்டாரங்களை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு, கை செய்யப்பட்டுள்ளார்கள் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. மேற்படி மாணவி இளைஞன் ஒருவரை காதலித்துள்ளார். இதன்போது, இருவரும் நிர்வாணப் புகைப்படங்களை தொலைபேசியில் பரிமாறியுள்ளனர். இந்த காதல் முறிவடைந்ததால், மாணவியின் ஒளிப்படங்களை தனது நண்பர்களிற்கு அந்த இளைஞன் பரிமாறினார்.இந்த புகைப்படங்களை வைத்து மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்க 4 மன்மதராசாக்கள் திட்டமிட்டுள்ளனர்.
அவர்கள் அந்த புகைப்படங்களை காண்பித்து, தமது ஆசைக்கு இணங்காவிட்டால் அவற்றை பகிரங்கப்படுத்தப் போவதாக மிரட்டியுள்ளனர். மாணவி இது தொடர்பாக ஊர்காவற்துறை பொலிசாரிடம் முறையிட்டார்.துரிதமாக செயற்பட்ட பொலிசார் இரண்டு மன்மதராசாக்களை கைது செய்தனர். மேலும் 2 மன்மதராசாக்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பொலிசார் தேடி வருகிறார்கள். இது தான் இன்றைய யாழ்ப்பாணம் … பாருங்கள் மக்களே பாருங்கள்….