நோட் ஸ்ரிம்- 1 (Nord Stream 1) என்ற பைப் லைனை ரஷ்யா நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்தக் குழாய் ஊடாக தான் ஜேர்மனிக்கு எரி வாயு வருகிறது. அங்கிருந்து பிரான்ஸ் மற்றும் கடலுக்கு அடியால் பிரிட்டனுக்கும் எரி வாயு வருகிறது. இதனை நிறுத்த உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ள நிலையில். பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் திடீர் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை எப்படி சரி செய்வது என்று, இந்த 3 நாடுகளும் ஆராய்ந்து வருகிறது. இன் நிலையில் மின்சாரத்தில் வீட்டை வெப்பமாக்கும், மற்றும் சுடு நீரை உருவாக்கும் கருவிகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவலாம். ஏன் எனில் இனி வரும் காலங்களில் மின்சாரத்தில் இயங்கும் ஹீட்டர் மற்றும் பாயிலர்களை தான் பிரிட்டம் மக்கள் பாவிக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. அமெரிக்கா இயற்கை எரிவாயுவை …
தருவதாக கூறுகிறது. ஆனால் அது கப்பலில் வந்து, பிரித்தானியாவை அடைந்து பின்னர் அந்த எரிவாயுவை குழாய் மூலம் செலுத்துவது என்பது எல்லாம் மிக மிக சிரமமான வேலை. எனவே இனி வரும் காலத்தில் மக்கள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாக நேரிடும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.