லண்டனில் பழைய படி பெற்றோலுக்கு Q நிற்க்க ஆரம்பித்து விட்டது: லீட்டர் £2 பவுண்டுகள் வரை உயர வாய்ப்பு !

இந்த செய்தியை ஷியார் செய்ய

பிரித்தானியாவின் பல பகுதிகளில் பெற்றோலுக்கு மீண்டும் பெரிய, தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மக்கள் பதற்றத்தில் அளவுக்கு அதிகமாக பெற்றோலை நிரப்பி வருகிறார்கள். இதனால் பல நிலையங்களில் பெற்றோல் இல்லாமல் போயுள்ளது. மேலும் பல இடங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன் நிலையில் மசகு எண்ணை ஒரு பரல் 130 டாலராக உயர்ந்துள்ளது. எனவே பெற்றோல் விலை லீட்டருக்கு £2 பவுண்டுகளை தொடும் என்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள். கொரோனா கால கட்டத்தில் எப்படி பெற்றோல் தட்டுப்பாடு ஏற்பட்டதோ, அதே நிலை மீண்டும் வர உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து எண்ணையை நாம் பெற மாட்டோம் என்று ஷெல் நிறுவனம் திட்ட வட்டமாக அறிவித்து விட்ட நிலையில்… அடுத்து எந்த நாட்டிடம் இருந்து பெற்றோலை பெறப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஈரான் நாடு தான் இனி வழி காட்டி போல இருக்கே ? இனி என்ன எல்லா தடைகளையும் அமெரிக்கா நீக்கி ஈரானில் இருந்து தேவையான அளவு எண்ணையை எடுக்கும் என்று எதிர்பார்கலாம்….


இந்த செய்தியை ஷியார் செய்ய