உக்கிரைன் நாட்டில் உள்ள சென்னோபிள் அணு உலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னோபிள் அணு உலைக்கு அருகாமையில் தற்போது நடந்து வரும் பெரும் சண்டை காரணமாக வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க, இந்த அணு உலைக்கு மின்சாரம் இல்லை. மின்சாரத்தையும் ரஷ்ய படைகள் துண்டித்துள்ள நிலையில், அணு உலையின் வெப்பத்தை 48 மணி நேரத்தில் கட்டுப் படுத்த முடியாமல் போகும் என்றும். இன்னும் 48 மணி நேரத்தில் உந்த அணு உலை முற்றாக வெடிக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறியுள்ளது உக்கிரைன். இருப்பினும் ஏற்கனவே காற்றில் கதிர் இயக்க துகள்கள் காணப்படுவதாக பிறிதொரு செய்தி குறிப்பிடுகிறது. இதனை அமெரிக்க சாட்டலைட் ஒன்று ஆராய்ந்து வருகிறது. ஆனால் தரவுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்த துகள்கள், சுவாசம் ஊடாக சென்றால், உடனே நுரையீரல் கான்சர்(புற்று நோய்) வரும்… தோலில் பட்டால்..
தோல் புற்று நோய் வரும். இது ரஷ்ய வீரர்களையும் பெரும் ஆபத்தில் தள்ளும். ஆனால் மண்டை தட்டிய புட்டினுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை போரில் வெற்றி தேவை. இதற்காக அவர் அணு ஆயுதத்தை கூட பாவிக்க தயங்க மாட்டார் என்று கூறியது, சரி தான் போல் இருக்கிறது. இது ஐரோப்பிய வான் வெளி எங்கும் பரவக் கூடும். முதலில் போலந்து பின்னர் ஜேர்மனி போன்ற நாட்டை இது தாக்கக் கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. என்ன நடக்கப் போகிறது என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.Source Mod: Chernobyl could be 48 HOURS from leaking radiation, Ukraine warns, after power is cut off, making it impossible to cool spent nuclear fuel: