ஸ்டார் ஸ்ரிக் ஏவுகணைகளை கொடுக்கும் பிரிட்டன்: ரஷ்ய விமானம் இனி பறக்க முடியுமா ?

இந்த செய்தியை ஷியார் செய்ய

உக்கிரைனுக்கு அவசரமாக ஸ்டார் ஸ்கிரி என்னும் 6ம் தலை முறை நவீன ஏவுகணைகளை பிரித்தானியா அனுப்பி உள்ளது. இவை ரஷ்ய விமானங்களை துல்லியமாக சுட்டு வீழ்த்தும் என்று எதிர்பார்கப்படுகிறது. இதுவரை போரில் பாவிக்கப்படாத இந்த நவீன ரக ஏவுகணைகள் பலவற்றை பிரித்தானியா அள்ளி வழங்கியுள்ள நிலையில். இவை உக்கிரைன் படைகளிடம் நேரடியாக சேர்கப்பட உள்ளது. இது இவ்வாறு இருக்க தலை நகர் கிவிவை இன்னும் ரஷ்ய படைகளால் கைப்பற்ற முடியவில்லை. இதனை அடுத்து புட்டின் கெமிக்கல் ஆயுதங்களை பாவிக்க, ஒப்புதல் வழங்கக் கூடும் என்று பெண்டகன் உளவு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கெமிக்கல் ஆயுதங்களை பாவிக்க …

புட்டின் அனுமதி வழங்கினால், அது மனித குல பேரழிவாக இருக்கும் என்று வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். இது இவ்வாறு இருக்க அமெரிக்கா கொடுத்த ஸ்ரிங்கர் ஏவுகணைகளை பாவித்து உக்கிரைன் படைகள் , ரஷ்ய ஹெலி மற்றும் இலகு ரக போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. ஆனால் ரஷ்யாவின் அதி நவீன போர் விமானங்களை ஸ்ரிங்கர் தாக்கி அழிக்காது. இதன் காரணத்தால் தான், பிரித்தானியா ஸ்டார் ஸ்கிரி ஏவுகணைகளை கொடுத்துள்ளது.


இந்த செய்தியை ஷியார் செய்ய