போலந்து நாட்டிடம் உள்ள மிக் 29 ரக போர் விமானங்களை, உக்கிரைனுக்கு கொடுக்கும் படி அமெரிக்கா கேட்டுக் கொண்டது. இதற்கு போலந்து சம்மதம் தெரிவித்தது. ஆனால் போலந்து நாட்டில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உக்கிரைனுக்கு இந்த விமானங்களை நேரடியாக கொடுக்க போலந்து விரும்பவில்லை. இதனால் தனது விமானங்களை தாம் , ஜேர்மனிக்கு அனுப்புவதாகவும். ஜேர்மனியில் இருந்து அதனை உக்கிரைன் கொண்டு செல்லுமாறும் போலந்து சொல்கிறது. போலந்தில் இருந்து நேரடியாக விமானத்தை கொடுத்தால், தமது நாடு மீது ரஷ்யா கடும் கோபம் அடையும் என்று போலந்து பயந்து விட்டது. இது வரை காலமும், போலந்துக்கு இடையே உக்கிரைன் இருந்தது. உக்கிரைனுக்கு அப்பால் ரஷ்யா இருந்தது. ஆனால் தற்போது உக்கிரைனை கைப்பற்றி…
போலந்து நாட்டுக்கு மிக அருகாமையில் ரஷ்யா வந்து விட்டது. இதனால் ரஷ்யாவை பகைக்க போலந்து தயாராக இல்லை என்பது தெளிவாகப் புரிகிறது. இது இவ்வாறு இருக்க, ஜேர்மனியில் இருந்து இந்த விமானத்தை உக்கிரைன் கொண்டு செல்ல ஜேர்மனியும் விரும்பவில்லை. இப்படி அனைத்து நாடுகளும் ரஷ்யாவை பார்த்து தொடை நடுங்கிய வண்ணம் தான் உள்ளது.