நீங்கள் இங்கே படத்தில் பார்க்கும் றோமன் அம்ரோவிச், ரஷ்ய அதிபர் புட்டினின் மிக மிக நெருங்கிய நண்பர். ரஷ்யாவில் எண்ணை ஏற்றுமதிசெய்து அதில் இருந்து வரும் பெரும் தொகைப் பணத்தை உலக நாடுகள் பலவற்றில் இவர் முதலீடு செய்து வந்தார். இதில் அதிபர் புட்டின் பணமும் அடங்கும். றோமன் அம்ரோவிச் பிரிட்டனில் உள்ள மிகப் பிரபல்யமான செல்சீ உதைபந்தாட்ட கழகத்தை 3B பில்லியன் பவுண்டுகளுக்கு வாங்கி நடத்தி வந்தார். இவருக்கு பிரிட்டனில் சுமார் 5B பில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய சொத்துகள் இருந்தது. இவை அனைத்தையும் பிரித்தானியா நேற்றைய தினம் திடீரென முடக்கியது. இது போக மேலும் 4 ரஷ்ய தொழில் அதிபர்களது பணத்தை பிரித்தானியா முடக்கியுள்ளது. இதனால் மொத்தம் 15B (மில்லியன் அல்ல) பில்லியன் பவுண்டுகளை பிரித்தானியா முடக்கியுள்ளது. இதனால் ரஷ்ய அதிர்பர் புட்டின் கடும் ஆத்திரமடைந்துள்ளார். ஏன் எனில்….
இந்த 5 நபர்களும் புட்டினின் மிக மிக நெருங்கிய நட்பு வட்டத்தில் உள்ளவர்கள். ஒரே நாளில் பெரும் செல்வந்தராக இருந்து தற்போது கையில் எதுவும் இல்லாத ஏழை பொல ஆகிவிட்டார்கள். இவர்கள் 5 பேரும் பிரிட்டன் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா அவசர கால நிலையை பாவித்து. இவர்களது சொத்தை முடக்கியுள்ளது.