உக்ரைன் ராணுவத்தில் கோவை மாணவர் சாய் நிக்கேஷ்: அவரது வீட்டை சல்லடை போட்ட RAW பிரிவு !

இந்த செய்தியை ஷியார் செய்ய

நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ளது. இன் நிலையில் பல வெளிநாட்டவர்கள் உக்கிரைன் சென்று ரஷ்யாவை எதிர்த்து போராடி வருகிறார்கள். உக்கிரைன் ராணுவத்திற்கு ஆதரவு கொடுக்க, அங்கே தேசத்தை காக்கும் மக்கள் படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம் துடியலூரை சேர்ந்த சாய் நிகேஷ் எனும் இளைஞர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்து ரஷ்யாவுக்கு எதிரான போர் புரிந்து வருகிறார். 21 வயதாகும் சாய் நிகேஷ் கடந்த 2019-ம் ஆண்டு முதல் உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள கார்கோ நேஷனல் எரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் விமானவியல் துறையில் படித்து வருகிறார். சிறுவயது முதலே இந்திய ராணுவத்தில் இணைந்து பணியாற்ற அதிக ஆர்வத்துடன் இருந்த சாய் நிகேஷ் அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். ஆனால் உயரம் குறைவாக இருந்த காரணத்தால் அவர் இந்திய ராணுவத்துக்கு தேர்வு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இன் நிலையில் அவரது வீட்டுக்குச் சென்ற மத்திய புலனாய்வுப் பிரிவினர்(RAW) மற்றும் தமிழக Q பிரிவினர்…

அவரது வீட்டை சல்லடை போட்டு தேடியுள்ளார்கள். என்ன கொடுமையடா இது ? சாய் போராடுவது என்று தீர்மானித்து அங்கே போராடி வருகிறார். எல்லா மாணவர்களும் தப்பி ஓடிய நிலையில், ஒரு தமிழன் அங்கே நின்று மக்களுக்காக போராடி வருகிறான். அவனை கொச்சைப் படுத்த இந்திய மத்திய அரசு தவறவில்லை.


இந்த செய்தியை ஷியார் செய்ய