கத்திமுனையில் பாலியல் வன்புணர்வு; தமிழ் நடிகையை நிர்வாணமாக்கி வீடியோ; ‘வாடிக்கையாளர்’ போல வந்த இருவர் கைவரிசை

இந்த செய்தியை ஷியார் செய்ய

சென்னையில் நடிகை ஒருவருக்கு, டேட்டிங் செயலியான லொகாண்டோ மூலம் அறிமுகமான இருவர் வீட்டிற்குள் புகுந்து கத்தி முனையில் நகை பணம் பறித்ததோடு அவரை நிர்வாணமாக்கி பாலியல் வன்புணர்வு செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

டேட்டிங் செயலியில் செல்போன் நம்பரை பதிவிட்டதால் நடிகை இந்த விபரீதத்தில் சிக்கியுள்ளார்.

சென்னை வளசரவாக்கம் ஏ.கே.ஆர்.நகர் முதல் தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (35). சினிமா துணை நடிகையாக உள்ளார். இவர் கருத்து வேறுபாடு காரணமாக 3 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவர் நேற்று அதிகாலை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அளித்தார்.

தனது வீட்டிற்குள் நுழைந்த அடையாளம் தெரியாத இருவர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்து விட்டு, கத்தியைக் காட்டி மிரட்டி 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 10 கிராம் தங்க நகைகளை பறித்துக் கொண்டு சென்று விட்டதாக புகார் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்திய போது, கத்தியுடன் வந்த நபர்கள் மிரட்டியதால் தன்னால் கூச்சலிட்டு உதவிக்கு அழைக்க முடியவில்லை என தெரிவித்தார்.

பூட்டி இருந்த வீட்டுக்குள் இருவரும் எப்படி நுழைந்தனர் என்று விசாரித்த போது, சினிமாவில் துணை நடிகையாக இருந்தாலும் போதிய வாய்ப்புகள் வராததால் டேட்டிங் செயலியான, லொகண்டோ இணையதளத்தில், தனது செல்போன் நம்பரை பதிவு செய்து வைத்திருந்த அந்த நடிகை , விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததால் வீடு தேடி வந்த வில்லங்கம் வெளிச்சத்திற்கு வந்தது.

திருமணமானவரான அந்த நடிகை கணவரை பிரிந்து கடந்த சில வருடங்களாக தனியாக வாழ்ந்து வருகிறார். அவ்வப்போது கிடைக்கும் சினிமா வாய்ப்புகளில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்துள்ளார்.

போதிய வருமானம் இல்லாததால் டேட்டிங் செயலியான லொகாண்டோவில் தனது செல்போன் எண்ணை பதிவு செய்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதன் மூலம் நடிகையையுடன் கண்ணதாசன் என்பவர் அறிமுகமாகி உள்ளார். நடிகையை அவ்வப்போது சந்தித்து சென்ற கண்ணதாசன் அவர் வீட்டில் துணையின்றி தனியாக இருப்பதை அறிந்து அவரது வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று வேறு ஒரு வாடிக்கையாளர் போல நடிகையை தொடர்பு கொண்ட கண்ணதாசன் தனது கூட்டாளி செல்வக்குமாருடன் நடிகையின் வீட்டிற்கு சென்றுள்ளார். முதலில் செல்வக்குமார் நின்றதால் கதவை திறந்த நடிகையைத் தள்ளிக் கொண்டு கண்ணதாசனும் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

துணை நடிகை விஜயலட்சுமியின் கழுத்தில் கத்தியை வைத்து சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அவர் அதிர்ச்சியில் மவுனமானார்.

மற்ற நபர் தனது செல்போனில் வீடியோவை ஓன் செய்தார். விஜயலட்சுமியை அவரது ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்றி சொல்லி அதை வீடியோ எடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் நடிகையை நிர்வாணமாக பல கோணங்களில் வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர் அவரை பாலியல் வன்புணர்வு செய்தனர்.

அதோடு இல்லாமல் நடிகை கழுத்தில் அணிந்த இருந்த 6 கிராம் செயின், 4 கிராம் கம்மலை கழற்ற சொல்லியுள்ளார். ஆனால் விஜயலட்சுமி நகையை கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

அப்போது மர்ம நபர் தற்போது எடுக்கும் வீடியோவை பேஸ்புக் லைவ் செய்துவிடுவேன் என்று மிரட்டி நகைகள் மற்றும் நடிகை வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை பறித்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டு அந்த நபர் தனது நண்பருடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

வந்த நபர்கள் யார் என்று துணை நடிகை விஜயலட்சுமியால் அடையாளம் கூறமுடியவில்லை. இரவு 11.30 மணிக்கு மேல் சம்பவம் நடந்துள்ளது. ஆனால் துணை நடிகை விஜயலட்சுமி நேற்று அதிகாலை 3 மணிக்கு வாய் மொழியாக புகார் அளித்துள்ளார்.

அப்போது இரவு ரோந்து பணியில் இருந்து விருகம்பாக்கம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் விஜயலட்சுமியிடம் நடந்த சம்பவத்தை புகாராக கொடுக்கும் படி கூறினார். ஆனால் துணை நடிகை நான் காலையில் வந்து புகார் அளிப்பதாக கூறிவிட்டு சென்றுவிட்டார்.

காலையில் நடிகை அளித்த புகாரின் பேரில் பலாத்கார வழக்கு பதிவு செய்த வளசரவாக்கம் போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் நெட்வொர்க் மூலம் பலாத்கார கொள்ளையர்களான செல்வக்குமார் மற்றும் கண்ணதாசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

முன்னதாக லொகாண்டோ செயலியில் தனது செல்போன் நம்பரை பதிவு செய்து வைத்துக் கொண்டு சட்டவிரோதமாக ஆண் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வில்லங்கத்தில் சிக்கியதால் அந்த நடிகை சம்பவத்தை மாற்றி கூறியது விசாரணையில் தெரியவந்தது.

அதே நேரத்தில் எப்படிப்பட்ட பழக்கவழக்கமுள்ள பெண்ணாக இருந்தாலும், அவரது விருப்பமின்றி அவரை தொடுவதே கடுமையான குற்றம் என்ற அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.


இந்த செய்தியை ஷியார் செய்ய