தீவிரமடையும் போர்…. உக்ரைனில் மாட்டி தவித்து வந்த சீனர்கள் மீட்பு….!!!

இந்த செய்தியை ஷியார் செய்ய

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 18ஆம் நாளாக போர் தொடுத்து வருகிறது. இத்தாக்குதலில் இருதரப்பிலும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. எனவே, அந்நாட்டு மக்கள் தங்களை காத்துக் கொள்வதற்காக லட்சக்கணக்கில் நாட்டிலிருந்து வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள்.

இந்நிலையில், உக்ரைன் நாட்டில் மாட்டி தவித்து வந்த சீன மக்கள் தற்காலிக விமானத்தின் மூலமாக மீட்கப்பட்டு சீனாவின் சாங்தாங் மாகாணத்தில் இன்று பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளனர். தற்போது வரை உக்ரைனில் மாட்டிக்கொண்டிருந்த சீன மக்கள் 11 தற்காலிக விமானங்கள் மூலமாக மீட்கப்பட்டிருக்கிறார்கள்.


இந்த செய்தியை ஷியார் செய்ய