24 மணி நேரத்தில் உள்ளே போடுவேன்: கூகுகளை மிரட்டும் ரஷ்ய KGB உளவுப் படை: புட்டின் ஏவி விட்டார் !

இந்த செய்தியை ஷியார் செய்ய

ரஷ்யாவின் தலை நகர் மாஸ்கோவில் வேலை பார்த்த கூகுள் நிறுவனத்தின் CEO வை, ரஷ்ய KGB ஏஜன்டுகள் நேரடியாகச் சென்று மிரட்டி உள்ளார்கள். இதனால் இந்தப் பெண் அதிகாரியை கூகுள் நிறுவனம் ஒரு ஹோட்டலில் தங்க வைத்தது. ஆனால் குறித்த ஹோட்டலுக்குச் சென்ற KGB உளவுப் பிரிவினர், மீண்டும் கூகுள் CEO பெண்ணை மிரட்டியுள்ளார்கள். கூகுள் நிறுவனத்தின் கருத்துக் கணிப்பு, Software பாவித்து , ரஷ்ய எதிர்கட்சியினர் ருத்துக் கணிப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். அதில் போருக்கு எதிரான ரஷ்யர்கள் தமது கருத்தை பதிவு செய்யலாம் என்று போடப்பட்டுள்ளது. இதனை அடுத்து பல்லாயிரக் கணக்கான ரஷ்யர்கள், அதில் தமது பதிவுகளை போட்டுள்ளார்கள். ஆனால் அந்த மென் பொருளை(Software ) உடனே செயல் இழக்கச் செய்யுமாறு, ரஷ்ய உளவுத்துறையினர் குறித்த பெண் அதிகாரியை கடுமையாக மிரட்டி உள்ளார்கள். அத்தோடு நின்றுவிடாமல்…

அவரை கைது செய்து சிறையில் அடைக்க 24 மணி நேரம் கெடு கொடுத்துள்ளார்கள். இதனால் கூகுள் நிறுவனம் தனது ரஷ்ய CEO வை எப்படி ரஷ்யாவில் இருந்து வெளிநாடு ஒன்றுக்கு கொண்டு செல்வது என்பது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது. அவரது பாதுகாப்பு மிக முக்கியமான விடையம் என்று,  சுந்தர் பிச்சை தெரிவித்துள்ள அதேவேளை. இந்திய அரசின் ஊடாக ரஷ்யாவை தொடர்பு கொள்ள சுந்தர் பிச்சை நடவடிக்கை எடுத்துள்ளார் என , சில தகவல்கள் கசிந்துள்ளது. ஆனால் நரேந்திர மோடியின் சொல் பேச்சை புட்டின் கேட்ப்பாரா ? அது மில்லியன் டாலர் கேள்வி…  Source : Russian agents threatened Google and Apple execs in Moscow with prison if they didn’t remove app to register protest votes against Putin:


இந்த செய்தியை ஷியார் செய்ய