கனடாவில் பயங்கரம்…. சாலை விபத்தில்…. 5 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு…!!!

இந்த செய்தியை ஷியார் செய்ய

கனடாவில் நேற்று முன்தினம் ரொறன்ரோ பகுதியில் இருக்கும் ஒரு நெடுஞ்சாலையில் இந்திய மாணவர்கள் ஒரு வேனில் பயணித்தனர். அப்போது எதிரில் வந்து கொண்டிருந்த டிராக்டர் ஒன்றின் மீது வேகமாக வேன் பலமாக மோதியது. இந்த கொடூர விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த மோஹித் சவுகான், பவன் குமார், ஹர்பிரீத் சிங், கரன்பால் சிங், மற்றும் ஜஸ்பிந்தர் சிங் ஆகிய 5 மாணவர்களும் பரிதாபமாக பலியாகினர்.

மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர், கனடாவில் நடந்த சாலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக கூறியிருக்கிறார். மேலும் காயமடைந்த இருவரும் குணம் பெற பிரார்த்திப்பதாகவும், @IndiainToronto உதவிகள் மற்றும் ஆதரவுகளை அளிக்கும் என்றும் கூறியிருக்கிறார்.


இந்த செய்தியை ஷியார் செய்ய