எப்படி உக்கிரைன் High-Tech ஆயுதங்களை பாவித்து ரஷ்யாவை திணறடித்து வருகிறது தெரியுமா ?

இந்த செய்தியை ஷியார் செய்ய

உக்கிரைன் நாட்டின் பல முக்கிய கேந்திர நிலையங்களை ரஷ்யா திட்டமிட்டு கைப்பற்றி உள்ளது. எஸ்:300 என்று அழைக்கப்படும் வான் பாதுகாப்பு பொறி முறையை ரஷ்யா உக்கிரைனுக்கு அருகில் நிலை நிறுத்தி வைத்திருக்கிறது. ஆனால் உக்கிரைன் போர் விமானங்கள் இன்று வரை உக்கிரைன் மீது பறந்து வருகிறது. ரஷ்யாவால் அதனை சுட்டு வீழ்த்த முடியவில்லை. இது இவ்வாறு இருக்க, ரஷ்யாவின் டாங்கிகளை குறி வைத்தே உக்கிரைன் ராணுவம் மிகவும் நேர்த்தியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது எவ்வாறு சாத்தியமாகிறது ? ரஷ்யா அமெரிக்க ராணுவத்தின் கட்டளைக்கு கீழ் இயங்கி வருகிறது என்கிறார்கள். பல நூறு ஆளில்லா விமானங்களை உக்கிரைன் வைத்திருக்கிறது. அவை சதா (24 மணி நேரமும்) வானில் பறந்த வண்ணமே உள்ளது. இதனை ரஷ்யா சுட்டு வீழ்த்த வில்லை. இவை தரும் தகவலுக்கு அமைய, உக்கிரைன் ராணுவம் செயல்படுகிறது. உக்கிரைன் ராணுவம் சிறிய சிறிய குழுக்களாக பிரிந்து செயல்பட்டு வருகிறது… ஒரு கொரில்லாக்கள் போல… இதனால்

அவர்கள் சிறிய படைகளில் டாங்கி அழிப்பு பிரிவு, வான் பாதுகாப்பு பிரிவு, மறைந்து இருந்து தாக்கும் பிரிவு என்று பல குழுக்கள் உள்ளது. அவர்களால் ஒரு இடத்தை சில மணி நேரத்தில் அடைந்து விட முடிகிறது. அவர்கள் ஆளில்லா விமானம் தரும் தகவலை வைத்து, நேரடியாக வீடியோவில் பாத்த வண்ணமே தாக்குதலை நடத்தி வருகிறார்கள். இன்று வரை உக்கிரைனில் 4G இன்ரர் நெட், மற்றும் ராணுவ அதி பாதுகாப்பு மிக்க இன்ரர் நெட் வசதிகள் உள்ளது. அது தடைப்படவே இல்லை. உக்கிரைன் நாடு தாமே தயாரித்த டாங்கிகளை தாக்கி அழிக்கும் ஆளில்லா விமானத்தையும் அதிகம் பயன்படுத்தி வருகிறது. ஆனால் ரஷ்யாவால் இந்த சிறிய ஆளில்லா விமானத்தை தாக்கி அழிக்க முடியவில்லை. இதனால் ரஷ்யா சற்றும் எதிர்பார்க்காத அளவு…

பலமான தாக்குதல் உக்கிரைனில் இடம்பெற்று வருகிறது. எனவே டாங்கிப் படைகளின் முன்னேற்றத்தை அப்படியே நிறுத்தி விட்டு, நகரங்கள் மீது ஆட்டிலறி தாக்குதல் மற்றும் ஏவுகணை கொண்டு தாக்கி வருகிறது ரஷ்யா. இதனால் அவை மக்கள் குடியிருப்பு மீது விழுந்து வெடித்து வருகிறது.


இந்த செய்தியை ஷியார் செய்ய