“கட்சி கூட்டத்துக்கு கூட்டி வந்து குதறிட்டிங்களே ..” -ஹோட்டலில் தங்கவைத்து வேட்டையாடிய கட்சி பிரமுகர்

இந்த செய்தியை ஷியார் செய்ய

தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சியில் ஒரு அரசியல் கட்சி பிரமுகர் வசித்து வருகிறார் .அந்த பிரமுகர் அவரின் தொகுதியில் வசிக்கும் ஒரு 15 வயதான பெண்ணை ஒரு கட்சி விழாவிற்காக ஹைதராபாத் கூட்டி வந்து ஒரு ஹோட்டலில் தங்க வைத்தார் .அந்த மைனர் பெண், அந்த பிரமுகருக்கு தெரிந்த ஒரு பெண்மணி மூலம் கூட்டி வரப்பட்டார் .

பின்னர் அந்த கட்சி விழா நடந்து கொண்டிருக்கும்போது அந்த பிரமுகர் மேலும் இருவருடன் அந்த ஹோட்டலுக்குள் வந்து அந்த மைனர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு போய் விட்டார். .அதன் பிறகு அந்த சிறுமி வீட்டிற்கு வந்து மிகவும் சோர்வாக இருந்தபோது அவரின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் இது பற்றி அவரிடம் கேட்டபோது ,அவர் தனக்கு அந்த அரசியல் பிரமுகர் மூலம் நடந்த கொடுமைகளை கூறினார் .பின்னர் அந்த பெற்றோரும் உறவினரும் அந்த பிரமுகர் மீது போலீசில் புகாரளித்ததும் போலீசார் வழக்கு பதிந்து உடந்தையாக இருந்த இருவரை கைது செய்து ,அந்த தலைமறைவாக உள்ள அரசியல் பிரமுகரை தேடி வருகின்றனர்


இந்த செய்தியை ஷியார் செய்ய