குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண், கடந்த 2018 ஆம் வருடத்தில் மும்பையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து கடந்த 2019-ஆம் வருடத்தில் இவர்களுக்கு குழந்தைகள் பிறந்திருக்கிறது. அந்த நபர் 2020 ஆம் வருடத்தில் நாம் அமெரிக்காவில் குடியேறலாம் என்று மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
குழந்தை பிறந்து மூன்று மாதங்களே ஆனதால், தன்னால் பயணம் மேற்கொள்ள முடியாது என்று அவரின் மனைவி கூறிவிட்டார். இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் அந்த நபர் தன் மனைவியை அடித்திருக்கிறார். எனவே, அவர் வீட்டிலிருந்து வெளியேறி விட்டார். அதன்பிறகு உறவினர்கள் சமாதானம் செய்து இருவரையும் சேர்த்து வைத்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து கடந்த வருடத்தில் இவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருக்கிறது. எனவே, அந்த நபர் மீண்டும் கனடாவிற்கு செல்லலாம் என்று தன் மனைவியிடம் கூறியிருக்கிறார். அப்போது அவரது மனைவி குழந்தைகளை வைத்துக்கொண்டு பயணிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
மீண்டும் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டிருக்கிறது. எனவே அந்த நபர் தன் மனைவியை அடித்து துரத்தியிருக்கிறார். குழந்தைகளை அவர் மனைவியுடன் அனுப்பவில்லை. அந்தப் பெண் தன் குழந்தைகளை பார்க்க வந்திருக்கிறார். அப்போது அந்த நபரும், அவரின் குடும்பத்தினரும் குழந்தைகளை அனுப்ப மறுத்துள்ளனர். எனவே அந்த பெண் காவல்துறையினரிடம் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது வன்முறை புகார் அளித்திருக்கிறார்.