மக்களே உஷார்!…. போனில் வரும் மர்ம அழைப்பு…. அந்த தப்ப மட்டும் செஞ்சுராதீங்க….!!!!

இந்த செய்தியை ஷியார் செய்ய

நெல்லை மாவட்டத்தில் உள்ள களக்குடியில் வசித்து வரும் துரை (வயது 37) என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய செல்போனிற்கு மர்ம அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய நபர், வங்கி கணக்கை புதுப்பிக்க போனுக்கு வரும் லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதனை நம்பி துரையும் லிங்கை கிளிக் செய்துள்ளார். இதையடுத்து அவருடைய வங்கி கணக்கில் இருந்து மூன்று தவணைகளில் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 750 பணம் திருடப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி துரை அந்த மர்ம நபருடைய செல்போனுக்கு போன் செய்து பார்த்துள்ளார். ஆனால் அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகே இது மோசடி என்பது துரைக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த செய்தியை ஷியார் செய்ய