எந்த பதற்றம் வேண்டாம்…. உக்ரைனிலிருந்து வந்தடைந்த விமானம்…. மீட்கப்படும் இந்தியர்கள்….!!!

இந்த செய்தியை ஷியார் செய்ய

உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும் அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து கல்வி, வேலை வாய்ப்புக்காக இந்தியாவை சேர்ந்தவர்கள் உக்ரைன் நாட்டிற்கு 20,000 பேருக்கு மேல் சென்றிருக்கின்றனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் மாணவ மாணவிகள் உக்ரைன் பல்கலைகழகங்களில் மருத்துவம், இன்ஜினியரிங் படித்து வருகின்றனர்.

மேலும் அங்கு மெட்ரோ சுரங்கங்களிலும், பதுங்கு குழிகளிலும் பதுங்கி உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. தற்போது உக்ரைனின் வான்பகுதி மூடப்பட்ட நிலையில் அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என்ற மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த 5 சிறப்பு விமானங்கள் உக்ரைனில் இருந்து டெல்லி வந்தடைந்துள்ளன.

தற்போது உக்ரைனில் இருந்து 1,156 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் ஹங்கேரி தலைநகர் பொலாரசில் இருந்து 240 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு ஆறாவது சிறப்பு விமானம் டெல்லிக்கு வந்தடைந்தது.


இந்த செய்தியை ஷியார் செய்ய