சத்தீஸ்கரில் பதுங்கிய ரவுடிகள்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்.. ஆனால் அந்த ரவுடி செய்த வேலை.

இந்த செய்தியை ஷியார் செய்ய

கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ஏ கேட்டகிரி ரவுடிகளான மதுரை பாலா மற்றும் அவரது கூட்டாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீதிமன்ற விசாரணைக்குக் கூட ஆஜராகாமல் நீண்ட நாட்களாக தண்ணி காட்டி வந்த அவர்களை சத்தீஸ்கர் மாநிலத்தில் வைத்து போலீஸார் பிடித்திருக்கின்றனர்.

தமிழகத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. அவற்றை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும், குற்றங்கள் குறைந்ததாக தெரியவில்லை. கைதேர்ந்த ரவுடி கும்பல்களே இதுபோன்ற கொலை, கொள்ளை சம்பவங்களை செய்து வருகின்றன. அவ்வாறு குற்ற செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை எளிதில் கண்டறிய போலீஸார், ஏ, பி, சி என வகைபடுத்தியிருக்கின்றனர். அவர்களது குற்றப்பிண்ணனிகளை வைத்து தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர்.

அந்தவகையில் 10க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி மதுரை பாலாவை ‘ஏ’ கேட்டகிரி ரவுடியாக காவல்துறையினர் வகைபடுத்தியுள்ளனர். இருந்த இடத்தில் இருந்தே ஸ்கெட்ச் போட்டு, கூலிப் படைகளை ஏவி கொலை செய்வது பாலாவின் ஸ்டைல்.. பிரபல ரவுடியாக இருந்த மயிலாப்பூர் சிவகுமார் உட்பட பலரை கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டது பாலா தான் என சொல்லப்படுகிறது. ஸ்கெட்ச் போட்டு ஆட்களை காலி செய்வதோடு, நீதிமன்றத்தில் சரண் அடைந்துவிடுவதும் பாலாவின் வாடிக்கை..

ஆனால் பல மாதங்களாக நீதிமன்ற விசாரணைக்கு கூட ஆஜராகாமல் பாலா தலைமறைவானார். இதனையடுத்து அவரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.. போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்த நிலையில், பாலவும் அவரது கூட்டாளிகளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கி விரைந்த ரவுடிகள் தடுப்பு பிரிவு போலீஸார், ராய்ப்பூரில் முகாமிட்டு மதுரை ரவுடி பாலா மற்றும் அவனது கூட்டாளிகள் ரவுடி சிவா மற்றும் மதன் ஆகிய 3 பேரையும் கைது செய்திருக்கின்றனர்.

சத்தீஸ்கரில் பதுங்கிய ரவுடிகள்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்.. ஆனால் அந்த ரவுடி செய்த வேலை..

இந்த நிலையில் ரவுடி மதுரை பாலா, தமிழக காவல்துறை தொடர்ந்து தங்களுக்கு தொல்லை கொடுத்து வருவதாகவும், தங்களது கை,கால் உடைக்கப்பட்டலோ அல்லது உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டாலோ அதற்கு தமிழக காவல்துறைதான் முக்கிய காரணம் எனக்கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


இந்த செய்தியை ஷியார் செய்ய