இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (police.lk) சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனை பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும், சில மணிநேரங்களில் இணையதளம் உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்பியதாக அந்த அதிகாரி கூறினார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவாவிடம், வீரகேசரி தொடர்பு கொண்ட போது, பொலிஸ் இணையத்தளம் ஹேக் செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டார்.
இது குறித்து விளக்கமளித்து அறிக்கை வெளியிட உள்ளதாகவும் அவர் கூறினார். எனினும், இதை எழுதும் நேரத்தில், காவல்துறை தலைமையகம் இது குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.