“இந்தியாவுடன் அமைதியான நட்புறவு”…. பாகிஸ்தான் புதிய பிரதமர் உறுதி….!!!!

இந்த செய்தியை ஷியார் செய்ய

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தியாவுடன் அமைதியான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை விரும்புவதாக தெரிவித்துள்ளார். அதாவது இந்திய பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தானின் 23வது பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீப்-க்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள ஷெபாஸ் ஷெரீப், அமைதி பேச்சுவார்த்தை மூலம் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவது இன்றியமையாதது, பாகிஸ்தான் இந்தியாவுடனான அமைதி மற்றும் ஒத்துழைப்பை விரும்புவதாக கூறியுள்ளார். மேலும் இரு நாடுகளும் சமூக பொருளாதார வளர்ச்சிக்கும், அமைதியை பேணவும் இணைந்து செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியை ஷியார் செய்ய