இன்று இந்தியாவுக்கு வருகை தரும் இங்கிலாந்து பிரதமர்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

இந்த செய்தியை ஷியார் செய்ய

இன்று 2 நாள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகிறார். அவர் லண்டனில் இருந்து புறப்பட்டு குஜராத் மாநிலம் ஆமதாபாத்துக்கு வந்து சேர்வார் என்று கூறப்படுகிறது. முதலில் முதலீடு மற்றும் வர்த்தகம் குறித்த விஷயங்கள் பற்றி கவனிக்க உள்ளார். மேலும் ஆமதாபாத்தில் உள்ள பல்கலைக்கழகத்திற்கும் செல்ல இருக்கிறார்.

அதோடு மட்டுமில்லாமல் கலாச்சார இடங்கள் சிலவற்றையும் போரிஸ் ஜான்சன் பார்வையிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து டெல்லியில் பிரதமர் மோடியுடன் நாளை பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அதேபோல் தொழிலதிபர்கள் சிலரையும் சந்தித்து பேச உள்ளார். எனவே இவரது இந்த பயணம் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.


இந்த செய்தியை ஷியார் செய்ய