“6 மாதம் லிவிங் டுகெதர்”… எஸ்கேப் ஆன கேரள வாலிபர்…. பழனி பெண்ணின் தைரிய செயல் ..!!!!!!!

இந்த செய்தியை ஷியார் செய்ய

கேரள மாநிலம் மலப்புரம் மஞ்சேரியை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் கடந்த ஒரு வருடமாக சென்னையில் தங்கி படித்து வருகின்றார். அதேபோன்று பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னையில் தங்கி ஒரு தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்திருக்கின்றனர். அப்போது அந்த வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி உள்ளார்.

அதனை நம்பி இளம்பெண் கடந்த 6 மாதமாக வாலிபருடன் தனி வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த வாலிபர் கடந்த 10 நாட்களுக்கு முன் தனது தந்தை வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார் நான் உடனடியாக கேரளா சென்று தந்தையை சந்தித்து திருமணத்துக்கு அனுமதி வாங்கி வருகிறேன் என கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் வாலிபர் வராததால் சந்தேகம் அடைந்த இளம் பெண் மஞ்சேரியில் உள்ள வாலிபர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வாலிபரை விசாரித்தபோது அப்படி யாரும் இங்கே இல்லை என அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் வாலிபரை சந்திக்கும் வரை அவரது வீட்டின் வெளியே தங்கி போராட்டம் நடத்தியிருக்கிறார். இதனை தொடர்ந்து மூன்று நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணிற்கு தெரியாமல் அந்த வாலிபரின் பெற்றோர்கள் தலைமறைவாகி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் மஞ்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் தமிழ்நாட்டிற்கு சென்று புகார் கொடுங்கள் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண் வாலிபரை பார்க்காமல் திரும்ப மாட்டேன் என கூறியுள்ளார். இந்நிலையில் அந்த பெண்ணை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த செய்தியை ஷியார் செய்ய