நாட்டை விட்டு தப்பியோடிய நாமலின் மனைவிக்கு ஒரு பகிரங்க மடல்

இந்த செய்தியை ஷியார் செய்ய

அன்புள்ள லிமினி,

நீயும் , உன் மகனும், உன் பெற்றோரும் நாட்டை விட்டு ஓடிப் போய் அங்கு வசதியாகவும் அமைதியாகவும் இருக்கக்கூடும் . ஆனால் , ‘கர்மா’ உன்னை அவ்வளவு இலகுவாக
விட்டு விடுமா ?

முன்பெல்லாம் , ஜனாதிபதியாகும் கனவுடன் அலையும் உன் கணவன்
நாமல் ராஜபக்சவுடன் – நீயும் இலங்கையைச் சுற்றி வந்தாய் . காரணமேயின்றி அமைச்சுகளுக்குச் சென்றாய் ; மற்றும் உனக்குச் சம்பந்தமே இல்லாத நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்கினாய் ; ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் புடைசூழ உன் மாமியாருடன் நீயும் பயணித்தாய் ;
உன் மாமியாரின் காலில் விழுந்து
கும்பிட்ட மக்கள் அடுத்ததாக உன்
காலிலும் விழுந்து வணங்கினார்கள் .
அவர்களில் உன்னைவிட இரண்டு மடங்கு வயதானவர்களும்
அடங்குவர் . ஆனா‌ல் , அவர்கள்
உன் காலில் விழுவதை நிறுத்த நீ முயற்சித்ததை நான் பார்த்ததேயில்லை …! இப்போது உன் காலில் விழுந்து வணங்குவது யார்?

உன் வாழ்வில் இப்போது கொஞ்சம் இடையூறுகளை எதிர்கொள்கிறாயா லிமினி ? உன் கணவன் நாமலும் , உன் மாமனார் குடும்பமும் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தனர். பின்னர், எரிவாயுத் தட்டுப்பாட்டை உருவாக்கி, மின்சாரத்தைத்
துண்டித்து பல வழிகளிலும் மக்களுக்கு இடையூறு விளைவித்தனர்.

உன் கணவன் நாமல் அண்மையில் ஒரு
கூட்டத்தில் உரையாற்றியபோது,
எரிவாயு சிலிண்டரை வீட்டிற்கு வெளியே வைத்திருக்கும் உன் புத்திசாலித்தனத்தை மெச்சினார் .
எரிவாயு சிலிண்டர் வெடித்து ஒரு தாய் இறந்ததை அடுத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவன் இவ்வாறு கூறினான் . ஒரு தாயாக, உன் மகனைத் தொட்டிலிட்டு ஆட்டியபடி, உன் விலையுயர்ந்த ஐபோனில் நீ இதைப் படிக்கும் போது, இன்னொரு தாயார் வெடித்துச் சிதறி இறந்ததைப் பற்றி உனக்கு கொஞ்சமேனும் கரிசனை உள்ளதா, லிமினி?

உனக்கும் நாமலுக்கும் திருமணம் அறிவிக்கப்பட்டபோது, உன்னை சிங்கள-பௌத்த பாரம்பரியத்தின் சின்னமாகச் சித்தரித்துக் கொண்டாடினார்கள் . செய்தித்தாள் பக்கங்களும், இணையதளங்களும் உன்னைப் பற்றி எழுதிக் குவித்தன.

நீ எளிமையானவள் ; அப்பாவி; அடக்கமானவள்; கன்னி கழியாதவள்; இனிமையானவள்; பாரம்பரியப் பண்புகள் நிறைந்தவள் என்று மட்டுமல்ல, நீ சைவ உணவு உண்பவள் என்றும் கொண்டாடித்
தீர்த்தனர் . ஹிட்லரும் சைவ உணவு உண்பவன் என்று உனக்குக் தெரியுமா? ஆறு மில்லியன் யூதர்களின் உயிரைக் குடித்த அவனும் சைவம் தான் என்பதை நீ அறிந்து வைத்திருக்கிறாயா?

உன் மாமனார் குடும்பம் குடித்த அப்பாவி மக்களின் இரத்தவாடை உன்
சைவ உணவிலும் கலந்திருக்கிறது. உன்
மகனுக்கு நீயூட்டும் தாய்ப்பாலிலும் எங்கள் இரத்தம் கலந்திருக்கிறது. அது என் அப்பா, அம்மா, சகோதரன், சகோதரியின் இரத்தம்; என் குழந்தைகளின் இரத்தம். எரிபொருள் வரிசையிலும், எரிவாயு வரிசையிலும் நீண்ட நேரம் காத்திருந்து இறந்த அப்பாவி மனிதர்களின் இரத்தமும் கூட . எங்கள் இரத்தத்தில் சுரக்கும் உன் தாய்ப்பாலை உன் ​​ மகன் கேசரா விரும்புகிறானா ? அதில் சுவை அதிகமா ? உன் தாய்ப்பாலில் ஓடும் மக்களின் சாபத்திற்கு நீ பயப்படவில்லையா?

எங்களின் சாபம் உன்னை சூழ்ந்திருக்கிறது லிமினி. உன் பிறந்த குழந்தையை மட்டுமல்ல, பிறக்காத குழந்தைகளைக் கூட மக்கள் சபிக்கிறார்கள். உனது மைத்துனிகளின் பிறந்த மற்றும் பிறக்காத குழந்தைகளையும் அவர்கள் சபிக்கிறார்கள். எங்களிடமிருந்து திருடப்பட்ட பணத்தில் உண்டு, குடித்து , உறங்கும் வரை, நீ இரத்தம் குடிக்கும் சைவக் காட்டேரியாகவே எங்களுக்குத் தோன்றும் . உனக்கு வெட்கமாக இல்லையா லிமினி ?

இப்போது ஷங்கரி -லா ஹோட்டல் உன் குடும்பத்த்தின் மறைவிடமாக இருக்கிறது. உன் குடும்பத்தின் கைக்கூலிகளும் அங்கே ஒளிந்து கொள்கிறார்கள். ஆனால், வசீம் தாஜுதீன், லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட, எரிவாயு சிலிண்டர் வெடிப்பில் இறந்த தாய், டீசல் வரிசையில் இறந்த தந்தை போன்றவர்களின் இறந்த ஆவிகளிடம் இருந்து உங்களால் பதுங்கி இருக்க முடியுமா?

எங்களுடைய திருடப்பட்ட பணத்துடன், மறைவிடத்தில் நீ எவ்வளவு காலம் சொகுசாக வாழ முடியும் ? லிமினி, நான் உனக்கு ஒரு சவால் விடுகிறேன். நாட்டின் அவல நிலைகுறித்து ஓர் இன்ஸ்டாகிராம் பதிவு, ஒரு முகநூல் பதிவு உன்னால் போடா முடியுமா? முடியாது
இல்லையா?

நாமல் ஷங்கரிலாவில் ஒளிந்து கொண்டது போல், எவ்வளவு காலம் நீ மறைந்திருப்பாய் ? உன் கழுத்தைச் சுற்றிவரும் இறந்தவர்களின் ஆவிகளிடமிருந்து தப்பிக்க உனக்கு
இரகசியப் பாதைகள் உள்ளன என்று நம்புகிறாயா ?

உன் பெற்றோர் எவ்வளவு காலம் இப்படி மறைந்திருக்க முடியும்? சுற்றுலா அமைச்சகம் மற்றும் ‘போர்ட் சிட்டி’யில் இருந்து கொள்ளையடித்த பணத்தைப் பெற்றுக்கொள்ள உன் அப்பா திரும்பி வர வேண்டும், இல்லையா? உன் தாய் “பிஸி பீன்ஸ் காபி ஷாப்”பில் உள்ள கஜானாவை எண்ணுவதற்கு வர வேண்டும். எவ்வளவு காலம் இப்படி ஒளிந்து கொண்டிருப்பீர்கள்? உலகெங்கிலும் உள்ள இலங்கையர்கள் கண்களைத் திறந்து வைத்து உங்கள் அனைவரையும்
கவனித்து வருகிறார்கள். நீ ஒரே ஒரு குழந்தையுடன் இருக்கும் ஒரு பெண். நாங்கள் இலட்சக் கணக்கில் போராடும் மக்கள். எங்களிடமிருந்து நீ எப்படித் தப்பி ஓடுவாய் ?

உன் மாமனார் ஒரு மோசமான ஜனாதிபதி என்றால், உன் பெற்றோர் அதை விடவும் மோசமான வியாபா‌ரிக‌ள் லிமினி. ஏனென்றால் அவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக உன் மானத்தையும், உங்கள் ஆன்மாவையும், உன் கருப்பையையும் விபச்சாரத்துக்கு அனுப்பி விட்டார்கள்.

உன் கணவனின் குடும்ப ஊழலில் உனக்கும் உன் பெற்றோருக்கும் பங்கிருக்கிறது . ஒரு நாள் மக்கள் சக்தி உங்கள் பணக் கோட்டையின் மீது மோதும்போது, ​​உன் பெற்றோர் உன்னை எப்படி விற்றார்கள் என்பதை நீ உணர்வாய் . ஆனால் அதைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாதே – இலங்கை, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான் , பங்களாதேஷ் மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் (உங்கள் குடும்பத்தின் புதிய சொர்க்கமான உகாண்டா உட்பட) பல பெற்றோர்கள் தங்கள் மகள்களை விபச்சாரத்திற்கு விற்கிறார்கள். ஆனால் ஒரு சிறிய வித்தியாசம் உள்ளது. அவர்கள் ஏழைகள் . பசிக் கொடுமையினால் தங்கள் மகள்களை விபச்சாரத்துக்கு அனுப்புகிறார்கள். கோடீஸ்வரர்களாக ஆவதற்கு அல்ல; உன் குடும்பத்தைப் போல தனிப்பட்ட சாம்ராஜ்ஜியங்களை உருவாக்க மக்களின் பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. உன் பணக்காரப் பெற்றோரை விட அந்த ஏழைப் பெற்றோருக்கு சுயமரியாதை அதிகம்.

கடைசியாக, லிமினி, உங்கள் மகன் கேசரை உங்கள் மாமியாரிடம் காட்ட வீடியோ அழைப்புகள் செய்யும்போது, ​​​​தயவுசெய்து உன் மாமனாரிடம் சொல்லி விடு. மகிந்த மஹத்தயாவாக இருந்து , மகாராஜா அந்தஸ்துக்கு உயர்ந்து, அப்பச்சி (தந்தை) என்று பலராலும் மதிக்கப்பட்ட அவர் இப்போது கிழட்டு மைனா
(நாகி மைனா) என்ற பட்டப் பெயர் சுமந்து கேவலப்பட்டு நிற்கிறார் .

அந்த நாகி மைனாவினாவுக்கு இனி எழுந்து நடக்கும் சக்தி இல்லை என்று எங்களுக்குத் தெரியும். அவன் சாவின் விளிம்பில் இருக்கிறான். அவன்
ஒரு கொலைகாரன்; மகா திருடன்…

அண்மையில் இலங்கையின் குடிமக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றின்போது அவன் இளைஞர்களை அச்சுறுத்தினான். ஆனால், அவனுக்கும் அச்சத்தில் சிறுநீர் வடிகிறது என்று எங்களுக்குத் தெரியும் என்று அவனிடம் சொல்லி விடு . அவனது சகோதரன் கோட்டாாபாய வீட்டிற்கு செல்லும் வரை அல்லது சிறையில் இடப்படும்
வரை நாங்கள் எங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம் என்றும் அவனிடம் சொல்லி விடு. அவனுடன்
நாக்கி மைனாவும் சிறைக்கு அல்லது அவனது கல்லறைக்குச் செல்லும்வரை
நாங்கள் போராடுவோம் . உனது உதவாக்கரை கணவன் , அவனது கொள்ளையடிக்கும் சகோதரர்கள், உங்கள் முழு குடும்பம் மற்றும் உறவினர்களையும் கேள்விக்குட்படுத்தாமல் நாங்கள் நிறுத்த மாட்டோம்.

நாக்கி மைனாவும் உன் கொள்ளையடிக்கும் குடும்பமும் ஆயுதப்படைகளையும் காவல்துறையையும் எங்களுக்கு எதிராகத் திருப்ப முடியாது. எங்களிடையே இன, மதப் பிரிவினைகளை இனியும் நீங்கள் தூண்ட முடியாது. நாங்கள் ஒரே இரத்தத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நாங்கள் புரிந்துகொண்டு விட்டோம் . நீயும், உன் குடும்பமும் , குலமும், உறவினர்களும் எங்கள் இரத்தத்தை உறிஞ்சுபவர்கள் என்று நங்கள் தெரிந்து கொண்டோம்.

நாகி மைனா அண்மையில்
தேசத்திற்கு ஆற்றிய உரையில், அரசியல் மற்றும் கடந்த காலத்தைப் பற்றி நமது பெரியவர்களிடம் சென்று கேட்குமாறு ‘அறிவுரை’ வழங்கினார். அது ஒரு அச்சுறுத்தல் போல இருந்தது.

நாகி மைனா கேட்டுக் கொண்டபடி ,
32 வயதான நான், க்ருஷா ஆண்ட்ரூஸ், எனது 82 வயதான பாட்டியிடம் கடந்த கால அரசியல் பற்றி கேட்டதாக நாகி மைனாவிடம் சொல்லு . இந்திரா காந்தி எப்படி இறந்தார் என்று என் பாட்டி பதில் சொன்னதாக நாகி மைனாவிடம் சொல்லு .
முதுமையிலும், கோபத்திலும் நுரைத்து, நடுங்கும் கால்களில் வழியும் சிறுநீரை அவன் துடைக்கும்போது, நான் சொன்னவற்றை அந்த நாகி மைனாவிடம் மறக்காமல் சொல்லிவிடு ​​லிமினி .


இந்த செய்தியை ஷியார் செய்ய