வாயில் சிகரெட் கையில் டாங்கியை தாக்கும் குண்டு- சர்வ சாதாரணமக குண்டு வைக்கும் உக்கிரைன் மக்கள்!

இந்த செய்தியை ஷியார் செய்ய

உக்கிரைன் நாட்டில் பல கிராமங்களில் மக்களே கொரில்லா படையாக மாறி, ரஷ்ய ராணுவத்திற்கு பெரும் அழிவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள். சமீபத்தில் மீடியாக்களில் வெளியான வீடியோ ஒன்று அனைவரையும் வியக்க வைத்துள்ளது. காரணம் கிராமம் ஒன்றில், வயதான நபர் ஒருவர் வாயில் செகரெட்டை புகைத்துக்க் கொண்டு, டாங்கிகளை தாக்கும் கண்ணி வெடி ஒன்றை புதைக்கிறார். அந்த வழியால் வர உள்ள ஏதோ ஒரு ரஷ்ய டாங்கி நாசமாகப் போகிறது. இவ்வாறு உக்கிரைனில் உள்ள பல லடம் மக்கள் ரஷ்ய படைகளுக்கு எதிராக திரும்புள்ள காரணத்தால் தான், ரஷ்ய ராணுவத்தால் இன்றுவரை சரியாக முன்னேற முடியவில்லை. இருப்பினும்…

மேலும் மேலும் படைகளை ரஷ்யா உக்கிரைன் எல்லைக்கு அனுப்பி வருகிறது. ஆனால் இடை இடையே சமாதானம் தொடர்பாகவும் பேசி வருகிறது. புட்டினை பொறுத்தவரை அவர் ஒரு முறை சமாதானம் என்று பேசுகிறார், பேச்சு வார்த்தைக்கு ரெடி என்கிறார். ஆனால் படைகளை தொடர்ந்து அனுப்பிக் கொண்டு இருக்கிறார். இதனால் உக்கிரைன் அதிபர் குழப்பத்தில் உள்ளார்.


இந்த செய்தியை ஷியார் செய்ய