குமுறிய அரசுப்பள்ளி மாணவிகள்! தலைமையாசிரியர் சிறையிலடைப்பு

இந்த செய்தியை ஷியார் செய்ய

தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக அரசு பள்ளி மாணவிகள் அளித்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் பகுதியில் அரசு தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் லட்சுமண வேல். இவர் பறக்கை பகுதியைச் சேர்ந்தவர்.

லட்சுமண வேல் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இந்த புகார் பள்ளி வளாகத்திற்கு உள்ளேயே பல மாணவிகள் சொல்லி வந்துள்ளனர்.

நாளுக்கு நாள் லட்சுமணவேல் பாலியல் தொல்லை அதிகமாகவே, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் பறந்திருக்கிறது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பள்ளியில் நேரில் சென்று ஆய்வு நடத்தி இருக்கிறார்கள். மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டிருக்கிறார்கள். இதில் தலைமை ஆசிரியர் லட்சுமண வேல் தங்களிடம் அத்து மீறி தகாத முறையில் நடந்து கொண்டதாக மாணவிகள் பலரும் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அதிகாரிகள் தலைமையாசிரியர் லட்சுமண வேல் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் லட்சுமண வேலை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


இந்த செய்தியை ஷியார் செய்ய