அதிர்ச்சி!…. ரஷ்ய வீரர் செய்த கொடூர செயல்…. 16 வயது கர்ப்பிணி பெண் அளித்த பேட்டி….!!!!

இந்த செய்தியை ஷியார் செய்ய

ரஷ்யா, உக்ரைன் மீது கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் சுமார் லட்சக்கணக்கான மக்கள் சொந்த நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இந்த நிலையில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள உக்ரைனின் கெர்சன் கிராமத்தில் வசித்து வரும் 16 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பேட்டி கொடுத்துள்ளார். அதாவது அந்த பெண், “ரஷ்யாவின் தாக்குதலுக்கு பயந்து எங்களது வீட்டின் அடித்தளத்தில் குடும்பத்தினருடன் பதுங்கி இருந்தோம்.

மாலை வேளையில் உணவு கொடுப்பதற்காக குழந்தைகளுடன் வெளியில் செல்லும்போது அங்கு குடி போதையில் இருந்த ரஷ்ய வீரர் ஒருவர் எங்களை அழைத்து அனைவருக்கும் வயது என்ன ? என்று கேட்டார். 14 மற்றும் 12 வயதுடைய இரண்டு சிறுமிகள் உடனிருந்தனர். எனக்கு 16 வயது. முதலில் என்னுடைய தாயாரை அந்த ரஷ்ய வீரர் கூப்பிட்டார். பின்னர் அவரை விட்டுவிட்டு என்னை அழைத்தார். நான் சென்றதும் என்னுடைய ஆடைகளை களையுமாறு சத்தமாக கூறினார்.

ஆனால் நான் முடியாது என்று கூறினேன். உடனே அந்த ரஷ்ய வீரர் என்னுடன் படுக்க மறுத்தால் இன்னும் 20 பேரை கூப்பிடுவேன் என்று கூறி என்னை மிரட்டினார்” என்று பேட்டியளித்துள்ளார். மேலும் குடிபோதையில் இருந்த ரஷ்ய வீரர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதோடு அந்த கர்ப்பிணியை கொலை செய்யவும் முயற்சித்துள்ளார். அதேசமயம் இந்த சம்பவங்களை பார்த்த மற்றொரு ரஷ்ய வீரர் அதனை தடுக்க முற்பட்டார். இருப்பினும் குடிபோதையில் இருந்த ரஷ்ய வீரர் எதையுமே கேட்கவில்லை என்று அந்த கர்ப்பிணி பெண் தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியை ஷியார் செய்ய