16 வயது கர்ப்பிணியை சீரழித்த ரஷ்ய வீரர்! ஆசைக்கு இணங்காவிட்டால் 20 பேருடன் வருவேன் என மிரட்டல்

இந்த செய்தியை ஷியார் செய்ய

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் கெர்சனில் 16 வயது கர்ப்பிணியை குடிபோதையில் இருந்த ரஷ்ய வீரர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், ஆசைக்கு இணங்காவிட்டால் 20 பேரை அழைத்து வந்து துன்புறுத்தல் செய்வதாக மிரட்டியதாக பாதிக்கப்பட்ட கர்ப்பிணி கூறியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் நடவடிக்கை 2 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து வருகிறது. இந்த போர் நடவடிக்கையால் ஏராளமான மக்கள் உக்ரைனை விட்டு வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

தற்போது உக்ரைன் மீது ரஷ்யா வான்வெளி, தரை வழி தாக்குதலை தொடர்ந்துள்ளது. இதனால் உக்ரைன் வீரர்கள் மட்டுமின்றி அப்பாவி மக்களும் பலியாகின்றனர். உக்ரைனின் பதிலடியால் பிற ரஷ்யாவின் வீரர்களும் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் ரஷ்யா உக்ரைனில் போர் குற்றம் புரிவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அதாவது போர் விதிகளை மீறி பள்ளி, மருத்துவமனை கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், ரஷ்யாவின் தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் பலியாவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மேலும் உக்ரைன் பெண்களை மிரட்டி ராணுவ வீரர்கள் பலாத்காரம் செய்வதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக உக்ரைன் அதிபர், அமைச்சர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளனர்.

இந்நிலையில் தற்போது 16 வயது நிரம்பிய 6 மாத கர்ப்பிணி ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். குடிபோதையில் இருந்த நபர் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்ததாக அவர் தெரிவித்துள்ளது. இதுபற்றி அந்த கர்ப்பிணி சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

 

கெர்சன் நகரில் ரஷ்ய வீரர்கள் தாக்குதல் நடத்தினர். குண்டுவீச்சில் இருந்து தப்பிப்பதற்காக வீட்டின் அடித்தளத்தில் குடும்பத்துடன் பதுங்கி இருந்தோம். மாலை நேரத்தில் வயிறு பசித்தது. இதனால் உணவுக்காக வெளியே வந்தோம். எதிர்பாராத விதமாக குடிபோதையில் இருந்த ரஷ்ய வீரர் எங்களை பார்த்துவிட்டார். வயது, பெயர் விபரங்களை கேட்டார். நாங்கள் கூறினோம். பிறகு எனது தாயாரை அவர் அழைத்தார். அதன்பிறகு அவரை விட்டுவிட்டு என்னை அழைத்தார்.

 

நான் சென்றபோது ஆடைகளை அகற்றும்படி கூறினார். இதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். இதையடுத்து எனது ஆசைக்கு இணங்காவிட்டால் இன்னும் 20 பேரை கூப்பிட்டு வருவேன் என மிரட்டினார். நான் பயந்துவிட்டேன். வன்கொடுமை செய்த அந்த நபர் என் கழுத்தை நெரித்து கொல்லவும் முயன்றார். என்னை இன்னொரு வீரர் தான் காப்பாற்றினார். கொடுமை செய்த நபருக்கு நீலநிற கண்கள் இருந்தது. வேறு எதுவும் எனக்கு நினைவில்லை.

மேலும் அந்த நபரை சக வீரர்கள் ‛ப்ளூ’ என அழைக்கின்றனர். மேலும் அடுத்த நாளும் அந்த நபர் என்னை இன்னொரு நபரிடம் அழைத்து சென்றார். அவரும் என்னை மிரட்டினார். நான் பயந்துபோய் அழுதேன். இதையடுத்து அந்த நபர் என்னை மிரட்டி பார்ப்பதாக கூறி விட்டுவிட்டார். ” என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். சிறுமியின் இந்த குற்றச்சாட்டை உக்ரைனிய வழக்கறிஞர்கள் விசாரித்து உறுதிப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

 

 

 

 

 

 

 


இந்த செய்தியை ஷியார் செய்ய