“வீடு விற்பனை.. கணவரை வாங்கினால் சிறப்பு தள்ளுபடி” : முன்னாள் கணவரை விற்க மனைவி விளம்பரம் – என்ன காரணம்?

இந்த செய்தியை ஷியார் செய்ய

அமெரிக்காவைச் சேர்ந்த 44 வயதான பெண் கிரிஸ்டல் பால். இவர் சமீபத்தில் இணையதளத்தில் விளம்பரம் ஒன்றை செய்திருந்தார். அந்த விளம்பரம் சமூக வளைதளங்களில் பரவி வைராகி நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 53 வயதாகும் ரிச்சர்ட் ஷைலு என்பவரை திருமணம் செய்துக்கொண்டு தற்போது விவகாரத்து வாங்கியுள்ளார். ஆனாலும் இவர்கள் தொடர்ந்து நண்பரகளாக தங்களின் உறவை தொடர்வதாக கூறப்படுகிறது. மேலும் இருவருமே, இவர்களுடைய மகன் ஒருவரை சேர்ந்து பார்த்துக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தான் தன்னுடைய மகனுக்கு என ஒரு சொந்த வீடு வாங்குவதற்காக, தங்களிடம் உள்ள 3 வீடுகளில் ஒன்றை விற்க முன்வந்துள்ளார் கிரிஸ்டல் பால். இதனையடுத்து, வீடு விற்க கிரிஸ்டல் பால், செய்த விளம்பரம் ஒன்று நெட்டிசன்களிடையே பேசு பொருளாகியுள்ளது.

இவர் செய்த அந்த விளம்பரத்தில், “என்னுடைய அற்புதமான வீட்டோடு சேர்ந்து எனது முன்னாள் கணவரும் விற்பனைக்கு.. என் முன்னாள் கணவரை வாங்குவோருக்கு சிறப்பு சலுகையும் உண்டு. இவரை ஏன் வாங்கவேண்டும் என்றால், அவர் நன்றாக சமைப்பார், வீட்டை சுத்தமாக பராமரிப்பார்” என்று விளக்கம் கொடுத்துள்ளார். இந்த அறிவிப்புதான் சமூக வலைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை ஷியார் செய்ய