மசூதியில் குண்டுவெடிப்பு… ரமலான் காலத்தில் நிகழ்ந்தப்பட்ட கொடூர தாக்குதல்!

இந்த செய்தியை ஷியார் செய்ய

மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 10 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதியில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்று கொண்டிருந்தது. ரமலான் மாதம் என்பதால் வழக்கத்தைவிட அதிகமானோர் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

 

அப்போது மசூதிக்குள் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், 15க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்ததாகவுமம் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொடூரமான தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்போ, குழுவோ இதுவரை பொறுப்பேற்கவில்லை.

ஆப்கானிஸ்தனை விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறிவிட்டதையடுத்து, தற்போது அங்கு தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது.


இந்த செய்தியை ஷியார் செய்ய