நம்முடைய அழகான இந்த பூமி ஏழு கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதில் சிறிதும் பெரிதுமாக 195 உள்ளன. அப்படி உலகிலேயே மிகப்பெரிய 5 நாடுகள் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.
1.ரஷ்யா:
1,70,75,400 சதுர கிலோ மீட்டர் கொண்ட ரஷ்யா உலகிலேயே நிலப்பரப்பில் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு உள்ள ஏரிகள் உலக நன்னீர் நிலைகளில் பரப்பளவில் நான்கில் ஒரு பங்கு உள்ளது. உலகின் மிகப் பெரிய எண்ணெய் மற்றும் இயற்கை வாயு ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நாடாகவும் ரஷ்யா விளங்குகிறது.
2. கனடா:
99,84,670 சதுர கிலோ மீட்டர் கொண்ட கனடா வட அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடு ஆகும். வடக்கே வட முனையும் கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும் தெற்கே அமெரிக்க ஒன்றியமும் மேற்கே பசிபிக் பெருங்கடலும் அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
3. அமெரிக்கா:
98,26,630 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட அமெரிக்கா உலகிலேயே மிகப்பெரிய மூன்றாவது நாடு ஆகும்.
4.சீனா:
9,600,000 சதுர கிலோ மீட்டர்கள் கொண்ட ஆசியாவிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடான சீனா நான்காவது மிகப்பெரிய நாடு ஆகும். சீனாவின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு மலைப்பாங்கான நிலப்பகுதியாகும்.
5. பிரேசில்:
85,14,877 சதுர கிலோமீட்டர் கொண்ட பிரேசில் உலகிலேயே ஐந்தாவது பெரிய நாடு ஆகும். பிரேசிலின் கிழக்கிலும் வடகிழக்கிலும் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது.7,491 கிமீ நீளமான கடற்கரை பிரேசிலுக்கு உண்டு.