நடிகர் விவேக் கடைசியாக வாழ்ந்த வீடு அந்த வீதிக்கு சின்னக் கலைவானர் என பெயர் மாற்றப்பட்டது !

இந்த செய்தியை ஷியார் செய்ய

நடிகா் விவேக் வீடு அமைந்துள்ள சாலையின் பெயா் சின்னக் கலைவாணா் விவேக் சாலை என பெயா் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது தொடா்பாக நகராட்சி நிா்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் சிவ் தாஸ் மீனா பிறப்பித்த அரசாணை: திரையுலகில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை நடிகராக வலம் வந்த சின்னக் கலைவாணா், கலைமாமணி, பத்மஸ்ரீ விவேக் கடந்த ஆண்டு ஏப்.17- ஆம் திகதி இம் மண்ணுலகை விட்டு மறைந்தார். அவரது நினைவாக அவா் வசித்து வந்த பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 10, பகுதி 29, வார்டு 128 இல் அமைந்துள்ள பத்மாவதி நகா் பிரதான சாலையை அப்பகுதி மக்கள், சமூக ஆா்வலா்கள் மற்றும் தன்னார்வலர்கள், சின்னக் கலைவாணா் விவேக் சாலை என பெயா் மாற்றம் செய்திட விருப்பம் தெரிவித்துள்ளனா்.

இதே கோரிக்கையை தென்னிந்திய நடிகா் சங்க துணைத்தலைவா் பூச்சி எஸ் முருகன் முதல்வா் இடத்திலும் வலியுறுத்தியுள்ளார். இவ்வாறு பெயா் மாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி மேயரும் ஒப்புதல் அளித்துள்ளார். இதற்கேற்ப உரிய பெயா் மாற்றத்தை செய்து அரசாணை வெளியிடுமாறு சென்னை மாநகராட்சி ஆணையா் அரசை கேட்டுக் கொண்டார். இதை ஏற்று, விவேக் நினைவாக, அவா் புகழைப் பறைசாற்றும் வகையில், அவா் வசித்து வந்த பத்மாவதி நகா் பிரதான சாலையை ‘சின்னக் கலைவாணா் விவேக் சாலை’ என பெயா் மாற்றம் செய்து அரசு ஆணையிடுகிறது என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த கோரிக்கையை, விவேக்கின் மனைவி அருட்செல்வி, சென்னை, தலைமைச் செயலகத்தில் கடந்த 25 ஆம் திகதி முதல்வா் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


இந்த செய்தியை ஷியார் செய்ய