பல நகரங்களில் இருந்து தப்பியோடிய ரஷ்ய துருப்புகள்: பல இடங்கள் உக்கிரைன் ராணுவத்தால் மீட்க்கப்பட்டது !

இந்த செய்தியை ஷியார் செய்ய

படு வேகமாக உக்கிரைனுக்குள் முன்னேறி வந்த ரஷ்ய ராணுவம், ஒரு கட்டத்தில் தலை நகர் கிவியைப் பிடித்து விடும் என்ற நிலையில் இருந்தது. ஆனால் சற்றும் மனம் தளராத உக்கிரைன் ராணுவம் கடுமையாக தாக்கியது. பல இடங்களில் உக்கிரைன் ராணுவத்தின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ரஷ்ய ராணுவம் திணறியது. இன் நிலையில் உக்கிரைனின் கிழக்கு கரை நகரங்களான டொன் பாஸ், மரியப் போல் ஆகிய நகரங்களை மட்டுமே முற்றாக ரஷ்ய படைகளால் கைப்பற்ற முடிந்துள்ளது. இங்கே உள்ள உக்கிரைன் வரை படத்தில் மஞ்சல் பகுதியாக இருக்கும் இடங்கள், ரஷ்யப் படைகளிடம் இருந்து , மீண்டும் உக்கிரைன் ராணுவம் மீட்ட இடங்களை குறிக்கிறது. சிவப்பு இடங்களாக இருப்பவை இன்னும் ரஷ்ய படைகளிடம் உள்ள உடங்கள், அதிலும் ஊதா நிற வளையம் போட்ட பகுதிகள், கடுமையாக சண்டை இடம்பெற்று வரும் இடங்கள். பெலருஸ் நாட்டில் இருந்து… கிளம்பி வந்த…

பெலருஸ் மற்றும் ரஷ்ய கூட்டுப் படைகள் பெரும் பின்னடைவைச் சந்தித்து மீண்டும் தமது எல்லைகளுக்கு துரத்தி அடிக்கப்பட்டுள்ளார்கள் என்பது பெரும் வியப்பான விடையம். பரா ஷூட்டில் குதித்து அதிபர் ஜிலான்ஸ்கியின் மாளிகையை கைப்பற்ற முனைந்த 150 ரஷ்ய ராணுவத்தினரும் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்கள். இது போர் ஆரம்பித்து சில தினங்களில் இடம்பெற்ற தரை இறக்கம் ஆகும். அன்று முதல் ரஷ்ய ராணுவம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இன் நிலையில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள், முன்னர் எந்த ஒரு நாட்டிற்கும் கொடுக்காத அளவு அதி நவீன ஆயுதங்களை அள்ளி வழங்கியுள்ள நிலையில். தற்போது ரஷ்ய போர் விமானங்கள் உக்கிரைன் மீது பறப்பதையே நிறுத்தி விட்டது.


இந்த செய்தியை ஷியார் செய்ய