அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் தனது செல்போனை எச்சில் துப்பி அன்லாக் செய்த அதிசயம் நடந்துள்ளது.
அமெரிக்காவின் மியாமி மாகாணத்தில் வசித்து வரும் இளம்பெண் மிலா மோனட். இவர் தனது தோழிகளுடன் மதுபான விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளார். தனது திறமையை வெளிப்படுத்தும் விதத்தில் செல்போனை வெளியே எடுத்து சமதளத்தில் வைத்துள்ளார்.
இதன் பின்னர் அதன் கீபேடில் உள்ள ஒவ்வொரு எண்ணிலும் சரியாக எச்சிலை துப்ப தொடங்குகிறார். இதுபோன்று 6 வெவ்வேறு எண்களின் மீது துப்பியதும் செல்போன் அன்லாக் ஆகிறது.
உடனே மெல்ல தலையை தூக்கி எதிரில் இருப்பவர்களை நோக்கி, வாயின் ஓரத்திலுள்ள எச்சிலை துடைத்தபடியே புன்னகைக்கிறார். இதனை வீடியோவாக எடுத்து மற்றொருவர் வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த சுற்றியிருந்தவர்கள் மகிழ்ச்சியில் கோஷம் போட்டுள்ளனர்.
இந்த வீடியோவை பார்த்த பலரும் பலவித விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், மோனட் உண்மையை துப்புகிறார்… குறியீடுகளையும் கூட என தெரிவித்து உள்ளார்.
இனி யாருடைய செல்போனையும் ஒருபோதும் நான் தொடமாட்டேன் என மற்றொரு நபர் தெரிவித்து உள்ளார். சமீப நாட்களில், பல உறவுகளை விட மோனட்டின் எச்சில் வலிமை நிறைந்துள்ளது என ஒருவர் தெரிவித்து உள்ளார்.
A girl using her spit to unlock her phone. 🃏 pic.twitter.com/dhMfaj6dYV
— Public Outsider (@publicoutsider) April 25, 2022