ரஷிய- உக்ரைன் போரை நிறுத்த முயன்றேன்: பெலாரஸ் அதிபர்

இந்த செய்தியை ஷியார் செய்ய

உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடங்கி 71-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷியா உக்ரைன் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த போரில் ரஷியாவுக்கு ஆதரவாக பெலாரஸும் செயல்பட்டு வருவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் ரஷிய உக்ரைன் போரை தான் ஆதரிக்கவில்லை என பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார். இந்த போர் குறித்து பேசிய அவர் கூறியதாவது:-

உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இவ்வளது நாட்கள் நீடிக்கும் என நான் நினைக்கவில்லை. இந்த போரை நிறுத்த நான் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டேன். எந்த வித போரையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உக்ரைன் ரஷியா இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறேன்.

சமீபத்தில் பெலாரஸ் மேற்கொண்ட ராணுவ பயற்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. நாங்கள் யாரையும் அச்சுறுத்தவில்லை. யாரையும் அச்சுறுத்தப்போவதில்லை. யாரையும் அச்சுறுத்தமாட்டோம். அதேவேளை, நாங்கள் அச்சுறுத்தப்படக்கூடாது. எங்களை எதிர்ப்பது யார் என்று எங்களுக்கு தெரியும். மோதலை உருவாக்கி மேற்கத்திய நாட்டில் போரை உருவாக்குவது பெலாரசின் திட்டமில்ல. ஆகையால், மேற்கத்திய நாடுகள் நிம்மதியாக உறங்கலாம்.


இந்த செய்தியை ஷியார் செய்ய