இது வரை காலமும் மகிந்த மற்றும் கோட்டபாய ஆகியோருக்கு ராணுவம் மற்றும் பொலிசார் என கலந்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இருப்பினும் முக்கிய பாதுகாப்புகளை ராணுவத்தினரே கவனித்து வந்த நிலையில். கோட்டபாய ராஜபக்ஷ உத்தரவின் பேரில், பல ராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளார்கள் என அதிர்வு இணையம் அறிகிறது. தற்போது பாதுகாப்பை முற்று முழுதாக பொலிசாரின் கைகளில் கோட்டபாய கொடுத்துள்ளார். ஏன் எனில் ராணுவத்தினரை இனி நம்ப முடியாது என்ற நிலையில் கோட்டபாய உள்ளதாக மேலும் அறியப்படுகிறது. இதற்கு வலுவான ஒரு காரணமும் உள்ளது. அது என்னவென்றால்…
மிகவும் வறிய குடும்பத்தில் இருந்து, மற்றும் படிக்காத இளைஞர்களே இலங்கை ராணுவத்தில் இணைந்தார்கள். வெறும் 50,000 ஆயிரம் தான் அவர்களின் சம்பளம். இதனால் இலங்கையின் இன்றைய நிலையில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது ராணுவத்தினரின் குடும்பங்கள் தான். இதன் காரணத்தால் தான் ராணுவத்தினர் ஆரம்பம் முதல் மக்கள் போராட்டங்களை அடக்க, முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சொல்லப் போனால், ராணுவத்தின் மன நிலையில் ,மக்கள் போராட்டம் என்பது சரி என்று எண்ணுகிறார்கள். ஆனால் பொலிசாரை பொறுத்தவரை, அவர்கள் லஞ்சம் ஊழல் என்று மாத சம்பளத்தை விட 1.5 லட்சம் மேலதிகமாக சம்பாதித்து விடுவார்கள். இதனால் பொலிசார் குடும்பம், எந்த விலை கொடுத்தாவது , மல்லிகைப் பொருட்களை வாங்கி குடும்பத்தை ஓட்டுகிறார்கள். இதனால் பொலிசார் அரசாங்கத்தின் பக்கம் உள்ளார்கள். இதனைக் கணக்குப் போட்டு தான்…
கோட்டபாய தனது ராணுவத்தை நம்பாமல் பாதுகாப்பு பொறுப்பை பொலிசார் கைகளில் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.