ரஷ்ய கப்பலில் ராடர் வேலை செய்யவில்லை என்று அமெரிக்கா காட்டிக் கொடுக்க தாக்கி அழித்த உக்கிரைன் !

இந்த செய்தியை ஷியார் செய்ய

கடந்த ஏப்பிரல் மாதம் 14ம் திகதி, ரஷ்யாவின் போர் கப்பலான மொஸ்வா உக்கிரைன் கடல் பரப்புக்கு அருகாமையில் நின்று கொண்டு இருந்தது. திடீரென பறந்து சென்ற உக்கிரைனின் ஆளில்லா விமானம் தாக்கியதில், மொஸ்வா போர் கப்பல் வெடித்துச் சிதறியது. குறித்த கப்பலை எப்படி ஆளில்லா விமானம் கொண்டு தாக்கி அழிக்க முடியும் என்று உலகமே வியந்தது. காரணம் அந்த கப்பலில் பல நவீனரக விமான எதிர்ப்பு ஆயுதங்கள் பொருத்தப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கிடைக்கும் செய்திகளின் அடிப்படையில், ஏப்பிரம் மாதம் 14ம் திகதி அன்று மொஸ்வா கப்பலில் இருந்த முக்கிய ராடர் ஒன்று செயல் இழந்துள்ளது. இதனை அமெரிக்கா எப்படி கண்டு பிடித்தது என்று தெரியவில்லை. ஆனால்…

உடனே தகவலை உக்கிரைன் ராணுவத்திற்கு சொல்லியுள்ளதோடு, அக் கப்பல் எங்கே தரித்து நிற்கிறது என்ற சரியான இடத்தையும் அமெரிக்கா காட்டிக் கொடுத்துள்ளது. இதனை அடுத்து 3 ஆளில்லா விமானத்தை உக்கிரைன் அனுப்பி உள்ளது. இதில் இரண்டு விமானம், கப்பலில் உள்ள சிறிய ராடரை திசை திருப்ப என அனுப்பப்பட்டது. 3வது ஆளில்லா விமானமே உண்மையில் தாக்குதல் நடத்தி, ரஷ்ய போர் கப்பலை அழித்துள்ளது என்ற தகவல் தற்போது தான் கசிந்துள்ளது.


இந்த செய்தியை ஷியார் செய்ய