“இளமை அப்படியே இருக்கும்”…. தினமும் சிறுநீர் பருகி வரும் மனிதர்…. வியக்க வைக்கும் சம்பவம்….!!!!

இந்த செய்தியை ஷியார் செய்ய

இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் என்றுமே இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய சிறுநீரை தினம்தோறும் குடித்து வருகிறாராம். இப்படி செய்வதால் தன்னுடைய தோற்றம் 10 ஆண்டுகள் இளமையாக இருக்கிறது என்று கூறுகிறார். இங்கிலாந்தை சேர்ந்த ஹாரி மடாதீன் என்பவர் தினசரி சிறு நீர் அருந்துவதன் மூலமாக தனது மனக் கவலை பெருமளவிற்கு தீர்ந்து உள்ளதாக கூறுகிறார். மனரீதியான பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சிறு நீர் அருந்தும் பழக்கத்தை இவர் தொடங்கியுள்ளார். மனதில் அமைதி, சாந்தம் மற்றும் உறுதி ஏற்படுவதற்கு இது உதவிகரமாக உள்ளதாம்.

தினந்தோறும் சிறு நீர் அருந்துவதன் மூலமாக தனது உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து அவர் கூறுகையில், நான் முதன் முதலில் சிறுநீர் அருந்திய போது என் கற்பனைக்கு மேலான சக்தி கிடைப்பதை உணர முடிந்தது. அது அருந்தியவுடன் எனது மூளை வேலை செய்ய தொடங்கி விடுகின்றது. அதனால் எனக்குள் இருக்கும் மன அழுத்தம் குறைகிறது. அமைதி, சாந்தம் மற்றும் உறுதி ஆகியவற்றை உணர முடிகின்றது. இதனால் நான் எப்போதும் மகிழ்ச்சி நிலையில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இவர் தினம்தோறும் 200 மில்லி அளவுக்கு தன்னுடைய சிறுநீரை குடித்து வருகிறார். ஒரு மாதம் பாதுகாக்கப்பட்ட சிறுநீர் மற்றும் புதிதாக எடுக்கப்பட்ட சிறுநீர் ஆகிய இரண்டையும் கலந்து குடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் சிறுநீரின் மணம் மற்றும் சுவை இவருக்கு மிகவும் பிடித்துள்ளது. மேலும் இவரின் நண்பர்கள் சிலரும் இந்த சிறுநீர் மருந்து சிகிச்சையை இவரது ஆலோசனையின் பேரில் எடுத்துக்கொண்டு வருகிறார்கள்.


இந்த செய்தியை ஷியார் செய்ய