தனியாளாக பிரிட்டிஷ் அரசாங்கத்தை மிரள விட்ட இந்தியர்…. மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை கதை….!!!!

இந்த செய்தியை ஷியார் செய்ய

இந்திய சுதந்திர போராட்டத்தில் மறக்க முடியாத வடு என்றால் அது ஜாலியன் வாலாபாக் படுகொலை தான். இது பற்றி அனைவரும் அறிந்திருப்போம். 1919 ஆம் ஆண்டில் ரவுலட் என்று அடக்குமுறைச் சட்டத்தை ஆங்கிலேய அரசு பிறப்பித்தது. அதன் மூலமாக யாரை வேண்டுமானாலும் காரணம் இல்லாமல் கைது செய்யும் அதிகாரம் போலீசுக்கு வழங்கப்பட்டது. இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. இதனைப் போலவே பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் ஜாலியன் வாலாபாக் என்ற மைதானத்தில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்தக் கூட்டத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட பலரும் திரண்டனர். அச்சமயம் ஜெனரல் டயர் என்ற வெள்ளை அதிகாரி பீரங்கி மற்றும் துப்பாக்கி படைகளுடன் அங்கு வந்து அந்த கூட்டத்தில் இருந்த அவர்களை சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிட்டான். அந்த கொடூர வன்முறையில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்கு பிறகு இந்தியாவே சுருண்டது. இந்தப் படுகொலையின் நூற்றாண்டு நினைவு தினம் ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதற்கு பழி தீர்த்தவர் உதம் சிங். ஜாலியன் வாலாபாக் படுகொலை கூட்டத்தில் இருந்தவர் இவர். தனது கண் எதிரே மக்களை சுட்டு வீழ்த்திய ஆங்கிலேயர் மைக்கேல் ஓ டயரை பழிவாங்க முடிவு செய்தார் உதம் சிங்.

ஆனால் அதற்காக பல வருடங்கள் காத்திருந்தார். 1940 ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி லண்டனில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டார். அதே கூட்டத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலையை அரங்கேற்றிய மைக்கேல் ஓ டயரும் கலந்துகொண்டிருந்தார். அந்தக் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொண்டு ஆயிரக்கணக்கான இந்தியர்களின் உயிர் பழிக்கு பழி வாங்கினார். என் மக்களின் ஆன்மாவால் நான் நொறுங்கினேன். அதனால் நான் அவனை நொறுக்கினேன் என்று கூறினார். பழிவாங்குவதற்காக இருபத்தி ஒரு ஆண்டுகள் காத்திருந்தேன் என்று கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தவர் இவர். இதனால் பிரிட்டிஷ் அரசாங்கமே அதிர்ந்து போனது.


இந்த செய்தியை ஷியார் செய்ய