ஏவுகணை சோதனைக்கு கண்டனம்…. வடகொரியாவை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு….!!!!

இந்த செய்தியை ஷியார் செய்ய

வடகொரியா நாடு, ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் அந்த நாடு நேற்று முன்தினம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ‘பாலிஸ்டிக்’ என்ற ஏவுகணை சோதனையை கிழக்கு கடலில் நடத்தியுள்ளது. இந்த சோதனை இந்த ஆண்டின் 14-வது ஏவுகணை சோதனை ஆகும்.

மேலும் இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் நெட் பிரைஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, இந்த ஏவுகணை சோதனையானது ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறி செய்கின்ற செயல் எனவும் இந்த சோதனையும் மற்றும் அணு ஆயுத திட்டங்களும் அண்டை நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்பதை இந்த நிகழ்வானது சுட்டிக்காட்டுகிறது என அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து மற்றொரு செய்தி தொடர்பாளர் கருத்து தெரிவிக்கையில் கூறியுள்ளதாவது, “மேலும் ஆத்திரத்தை தூண்டுவதை தவிர்க்கவும், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக ஆக்குகிற விதத்தில் நிலையான, உறுதியான பேச்சு வார்த்தையில் ஈடுபடவும் வடகொரியா நாட்டுக்கு அழைப்பு விடுக்கிறோம்” . இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த செய்தியை ஷியார் செய்ய