பாட்டியை எரித்து கொன்ற பேத்திகள் கைது… நெல்லையில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்

இந்த செய்தியை ஷியார் செய்ய

நெல்லை மாவட்டம் பேட்டை காவல் நிலைய சரகத்தில் கடந்த மே3 அன்று மதியம் 02.00 மணியளவில் பேட்டையிலிருந்து பழையபேட்டை செல்லும் இணைப்பு சாலையருகே காலி இடத்தில் அடையாளம் தெரியாத நிலையில் எரிந்து கருகிய உடல் கண்டெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் விசாரணை இருந்து வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கொடுத்த தகவலின் பேரில் பழையபேட்டை கிருஷ்ணபேரியை சேர்ந்த பொன் ஆறுமுகம்பிள்ளை என்பவரது மனைவி மாரியம்மாள் (வயது 30) மற்றும் இவரது சகோதரியான மேரி (வயது 38) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில், இருவரும் அவர்களது பராமரிப்பில் இருந்து வந்த அவர்களுடைய பாட்டி சுப்பம்மாள் (90) என்பவரை கவனிக்க முடியவில்லை என்ற காரணத்திற்காக அவரை ஒரு ஆட்டோவில் அழைத்து சென்று எரித்து கொன்றுவிட்டதாக வாக்குமூலம் கொடுத்தனர்.

குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து இருவரும் இன்று நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்கள். பாட்டியை 2 பேத்திகள் பராமரிக்க முடியாமல் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொலை செய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த செய்தியை ஷியார் செய்ய