பரபரப்பான சூழ்நிலையிலும் பலரின் கவனத்தை ஈர்த்த பொலிஸ் அதிகாரி

இந்த செய்தியை ஷியார் செய்ய

அரசாங்கத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைக் கலைப்பதற்கு, சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.

இன்று நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகாமையில் இன்று பிற்பகல் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதன் போது நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் மாணவர்கள் மீது பொலிஸாரால் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

இந்த நிலையில் அங்கிருந்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

கையில் காயத்துடன் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு குறித்த பொலிஸ் அதிகாரி பார்த்துக் கொண்டிருப்பது போன்று காணப்பட்ட புகைப்படத்தை பலரும் பகிர்ந்துள்ளனர்.

குறித்த பொலிஸ் அதிகாரியின் பார்வையில் பல அர்த்தங்கள் பொதித்துள்ளதாக சமூக வலைத்தள வாசிகள் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

கடமை செய்யும் இடத்தில் கடமையை செய்தாலும் அவரும் மனிதர் தான், அவருக்கும் பிள்ளைகள் இருப்பார்கள், என பலரும் பதிவிட்டுள்ளனர்.


இந்த செய்தியை ஷியார் செய்ய