பிரதமர் மகேந்திர ராஜபக்சே தம்பியும், நிதி அமைச்சருமான பசில் ராஜபக்சேவை விமர்சித்த இரண்டு அமைச்சர்களை அதிரடியாக பதவி நீக்க செய்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உததரவிட்டுள்ளார்.
இயற்கை எழில் கொஞ்சும தீவான இலங்கையின் பொருளாதாரத்தில் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா காணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலா பயனிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது.
இதனால் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. குறிப்பாக அரிசி, கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குதி செய்வதற்கு கூட தேவையான அந்நிய செலாவணி கையிருப்பு இல்லாமல் இலங்கை அரசு திக்குமுக்காடி வருகிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு உதவி வருகின்றன.
பொருளாதார நெருக்கடியுடன் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு என இலங்கை மக்கள் தொடர்ச்சியாக இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் நாடு சந்தித்துவரும் பிரச்னைகள் அனைத்துக்கும் நிதியச்சரும், பிரதமர் மகேந்திர ராஜபக்சே தம்பியுமான பசில் ராஜபக்சேதான் காரணம் என்று மின் துறை அமைச்சர் உதய கம்மான்பிளா, தொழி ல்துறை அச்சர் விமல் வீரவான்சா ஆகியோர் பகிரங்கக குற்றம்சாட்டியிருந்தனர்.
இதனையடுத்து இந்த இரு அமைச்சர்களையும் பதவி நீக்க செய்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். இவ்விரு அச்சர்களும் கூட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.